வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 04
🎱☘️🎱☘️🎱☘️🎱☘️🎱☘️🎱
🎭 இன்றைய நித்தியக்கடன்
🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎭 இன்றைய சாதகம்
🎭 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎭 இன்றைய நற்சிந்தனை
🎭 எந்த ஒரு அணுவும் இந்த நான்கு வகையான இயக்க நீதி உண்டு. 1,வளர்சியடைதல், 2,தன்னைப் போன்றே இன்னொரு அணுவை உருவாக்குதல், 3,சத்துப் பொருட்களை ஆற்றலாக மாற்றுதல், 4,தூண்டு வினைக்கு பதில்வினை செய்தல், ஜடப் பொருள், உயிர்ப்பொருள் இரண்டுக்குமே இந்த நீதி பொருந்தும். சீவ இனங்களுக்குள் ஒவ்வொரு அணுவும் இந்த நான்கு வகையான செயல்களை செய்து கொண்டே இருக்கிறது. ஜடப் பொருளிலும் இதே நீதி இருந்து இயங்குகிறது. ஒரு மரத்திற்கு இலையுதிர்காலம், குளிர் காலம், பூவிடும் காலம், காய்கனி காலம் இவை அனைத்தும் இந்நீதியின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.
🎭 இன்றைய தற்சோதனை
🎭 நமது உடலில் இதே நீதி வளர்ச்சி, தளர்ச்சி, முதிர்ச்சி என்ற அடிப்படையில் இயங்கும். இந்த நீதியை சரியாக தற்சோதனை செய்து தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டு வாழ்க்கையை சிக்கல் இல்லாமல் வாழ்வதற்கு ஒவ்வொரு கணமும் தற்சோதனை செய்யுங்கள். தற்சோதனையே நம்மை நாமே உயர்த்திக் கொள்ள கூடிய உயர்ந்த செயல் பண்பாகும்.
🎭 இன்றைய பண்புப் பயிற்சி
🎭 எல்லாவற்றையும் தற்சோதனை செய்யும் பண்பில் நம்மை ஆட்கொள்ள வேண்டும். எந்த ஒன்றையும் விட்டுவிடாமல் எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தை, இறைஞானத்தை தற்சோதனை செய்யும் பண்பில் உயர்வு காண்போம். இது ஒன்றே மனிதப்பண்பே நமக்குள் உயர்ந்த பழக்கமாகும்.
🎭 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎭 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🎭 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment