நித்தியக்கடன் ஆகஸ்ட் 03 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 03


🌿🎼🌿🎼🌿🎼🌿🎼🌿🎼🌿


🕸️ இன்றைய நித்தியக்கடன்


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🕸️ இன்றைய சாதகம்


🕸️ வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.

 

🕸️ இன்றைய நற்சிந்தனை


🕸️ இயற்கை எனும் பேராற்றல் இந்த பிரபஞ்சத்தை உருவாக்குவதற்காக, எடுத்த முயற்சிகளை கொஞ்சம் நாம் பின்னோக்கி சென்று நினைவுபடுத்தி பார்ப்போம். ஒன்றுடன் ஒன்று இணைந்தும், ஒன்றை ஒன்று அழித்தும், இருவேறுபட்ட தன்மைகளை ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைத்து, மோதவிட்டு, சிதறவிட்டு இப்பிரபஞ்சத்தில் தனக்கு தேவையான நிகழ்ச்சிகள் நடக்கும் போதெல்லாம், அவைகளை பாதுகாத்து பத்திரப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வந்திருக்கிறது...


🕸️ இன்றைய தற்சோதனை


🕸️ இயற்கையினுடைய அடுத்தடுத்த தன்மாற்றங்கள் ஒழுங்கமைப்புக்கு வரும் வரையில், இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து கொண்டே இருந்தது. ஒரு சீரான ஒழுங்கு அமைப்பிற்கும், இயக்கத்திற்கும் வந்தபின் அவைகளையெல்லாம் பாதுகாக்க துவங்கியது. அப்படி இயற்கையால் பாதுகாக்கப்பட்டு அரவணைக்கப்பட்டதுதான் இந்த சூரிய குடும்பமும், இதில் உருவான பூமியும், அதில் வாழும் உயிரினங்களுமாகும். இந்த இயற்கை உண்மைகளை எல்லாம் நாம் தெளிவாக புரிந்து கொண்டால்தான் நம்முடைய, பிறப்பின் வாழ்வின் நோக்கம் என்ன என்பது நமக்கு தெரியவரும்.


🕸️ இன்றைய பண்புப்பயிற்சி


🕸️ அப்படி தெரிந்துகொண்ட உண்மையோடு தான் நம்மால் வாழ முடியும். அவைகளை முறையாக கடைப் பிடிப்பதற்கு ஆர்வம் எழும். அந்த தன்னார்வம் தான் நம்மை முழுமைப்படுத்தும். நாம் மனிதர்களாக உருவத்தில் இருந்து கொண்டு, இன்னும் விளங்கின பண்புகளை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அவைகளை யெல்லாம் முழுமையாக அகற்றிக்கொள்ள நாள் தவறாமல் பயிற்சிகளை செய்ய வேண்டும். பயிற்சி ஒன்று தான் நம்மை பண்படுத்தும் பலப்படுத்தும். மனிதன் மனிதனாக வாழ இது ஒன்று தான் இறைவனால் அன்போடு வழங்கப்பட்டதாகும். வாழ்க வளமுடன்...

 

🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🕸️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments