வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 02
💠🎲💠🎲💠🎲💠🎲💠🎲💠
🏮 இன்றைய நித்தியக்கடன்
🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏮 இன்றைய சாதகம்
🏮 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🏮 இன்றைய நற்சிந்தனை
🏮 ஒரு வண்ணத்தோடு இன்னொரு வண்ணம் சேரும்போது மூன்றாவதாக புதியதொரு வண்ணம் உருவாகும். உதாரணத்திற்கு மஞ்சள் நிறத்தையும் நீல நிறத்தையும் சேர்த்தால் பச்சை நிறம் கிடைக்கும். இது போன்றே ஒருவரோடு மற்றொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது புதியதாக இன்னொரு கருத்து உருவாகும். இரு வேறுபட்ட தன்மைகள் ஒன்றுபடும் போது அங்கு புதிதாக ஒரு தன்மை உருவெடுக்கும்.
🏮 இன்றைய தற்சோதனை
🏮 இயற்கையினுடைய இந்த நீதி சரியாக துல்லியமாகவே நடைபெறுகிறது. இந்த நீதி மனிதர்களுக்குள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்போம். நமக்குள்ளாக இருக்கக்கூடிய சீவகாந்தத்தின் அடர்த்திக்கும், தன்மைக்கும் ஏட்பவே நம்மீது மோதக்கூடிய வான்காந்த அலைகளும், பிறரது எண்ணஅலைகளும் நமக்குள் செயலாக்கம் பெறுகிறது. நம்முடைய கருமையம் தூய்மையாகவும், ஜீவகாந்தம் அடர்த்தியாகவும் இருக்கும் போது எந்தவிதமான எதிர்வினை இயக்கமும் நமக்குள் செயல்பட முடியாது. இயக்க கோட்பாட்டினை காந்த தத்துவப்புரிதலோடு தற்சோதனை செய்து பாருங்கள்.
🏮 இன்றைய பண்புப் பயிற்சி
🏮 நமக்கு நம்மீது மிகுந்த கவனம் தேவை எல்லா வகையிலும் உங்களை நீங்கள் கவனத்தோடு கண்காணியுங்கள். உங்கள் மீது மோதி, சிதறி, ஊடுருவி, பிரதிபலித்து, இரண்டுக் குமிடையே ஓடிக்கொண்டிருக்கும் காந்த அலைகளை, இந்த கண்காணிப்பு பண்பு இருந்தால் மட்டும் தான் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இயற்கையின், இறைவனின் தன்மாற்ற சரித்திரத்தையும், அதன் எல்லா வகையான இயக்க நீதியையும். நமக்கு தெளிவாக விளங்க வைக்கும். இந்த கண்காணிப்பு பண்பினை சிறப்பாக செயலாக்கப் படுத்தி வளமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🏮 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment