நித்தியக்கடன் ஜூன் 28 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 28


🕸️🎭🕸️🎭🕸️🎭🕸️🎭🕸️🎭🕸️


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌀 இன்றைய சாதகம்


🌀 புதன்கிழமை 

காலை:- ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.

 

🌀 இன்றைய நற்சிந்தனை


🌀 புதிதாக நீங்கள் ஒரு வழித்தடத்தில் செல்லும் போது அந்த வழித்தடம் நீண்ட நெடியதூரமாக இருப்பது போல தோன்றும். அதே வழித்தடத்தில் பலமுறை சென்று பழகி விட்டோமேயானால் அது நீண்ட தூரம் என்ற உணர்வு எழாது. இந்த அனுபவம் அனைவருக்கும் நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். இதற்கு என்ன காரணம் ஒன்றே, ஒன்றுதான் நாம் செல்லக்கூடிய இடத்தை சிந்தித்துக்கொண்டே செல்கிறோம், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டே செல்கிறோம். இவ்வாறாக ஒரு எதிர்பார்ப்பு மிகுந்த தேடல். இது இயல்பாகவே தூரமாக இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி விடுகிறது. அதே வழித்தடத்தில் பழகிவிட்டால் மற்ற சிந்தனைகள் எதுவும் இல்லாமல், சாதாரணமாக நாம் இயல்பாக சென்று கொண்டே இருப்போம். அப்போது பெரிய நேரம், நீண்ட தூரம் என்று தோன்றவே தோன்றாது. இதுபோல்தான் நம்முடைய அகநோக்கு பயணமும்.


🌀 இன்றைய தற்சோதனை


🌀 எதிர்பார்ப்பு மிகுந்த தேடல் இது. நம்மை நிலைகுலையச் செய்யும். இவ்வாறான அகநோக்கு பயணம் நம்மை ஏமாற்றும். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பான நிலையில் உங்களுடைய கடமைகளை சரியாக செய்யுங்கள். ஆன்மீகத்தில் வெற்றி பெற இது ஒன்றுதான் மிகச் சிறந்த வழிமுறையாகும். எதிர்பார்ப்பை விட்டுவிட்டு ஏமாற்றங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக தற்சோதனை செய்து எதிர்பார்ப்புக்களை அறவே தவிர்ப்போம்.


🌀 இன்றைய பண்புப் பயிற்சி


🌀 திட்டமிடுதலுக்கும், எதிர்பார்த்தழுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டும் ஒன்று அல்ல ஒரு இலக்கை நிர்ணயித்து அதை சார்ந்த திட்டங்களை ஏற்படுத்தி கொண்டு அந்த இலக்கை நோக்கி பயணிக்கலாம். அதுவும் சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்த விளைவு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனோபாவத்தோடு திட்டமிட்டு செயல்படலாம். ஆனால் எதிர்பார்ப்பு என்பது இதுதான் இப்படித்தான் நடக்க வேண்டும், இது இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற பிடிவாத குணத்தை, உள் தன்மையாக கொண்டது எதிர்பார்ப்பு. உளவியலின் உண்மைகளை உணரும் பண்பில் வளர்த்துக் கொள்வோம். உளவியலை சரியாக புரிந்து கொண்டால் தான் மனநிறைவும், அமைதியும் நமதாகும். போராட்டம் இல்லாமல் வாழ்வை நிறைவாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...

 

🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments