வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 26
🎭🕳️🎭🕳️🎭🕳️🎭🕳️🎭🕳️🎭
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 பல கோடி பிறவிகளாக வந்த வினைபதிவு நம் கருமையத்தில் இருக்கிறது. இந்த கருமையத்தில் இருக்கக்கூடிய பதிவுகளை தேர்வு செய்து கொண்டு இந்த பிறவிக்கு பொருத்தமான வினை பதிவுகளுக்கு மட்டுமே நாம் செயல்களை செய்ய வேண்டும். இந்த மனித பிறவிக்கு பொருத்தமில்லாத வினை பதிவுகளை ஏற்படுத்தி கொண்டோமேயானால், அது நோய் பதிவாக வாழ்க்கை சிக்கலாக மனக்குழப்பம் ஆக பிரதிபலிக்கிறது.
🌀 இன்றைய தற்சோதனை
🌀 இந்த மனிதப் பிறவியானது மிகவும் புனிதமானது புண்ணிய பதிவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக உருவானது. ஐந்தறிவு ஜீவராசி வரைக்கும் பாவ பதிவு என்ற ஒன்று கிடையாது. ஆனால் ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களுக்கு பாவபுண்ணிய பதிவு இருக்கிறது. துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டால் அது பாவபதிவு, அளவுமுறைமீராமல் செய்யும் அனைத்து செயல்களும் புண்ணிய பதிவு. தற்சோதனை மட்டுமே இதனை பிரித்து உணர்த்தக்கூடிய சிறப்புமிக்கது. எல்லா வகையிலும் நம்மை நாம் தற்சோதனை செய்வோம்.
🌀 இன்றைய பண்புப் பயிற்சி
🌀 எந்த ஒன்று நமக்கு நடந்தாலும் அது நம் கர்மவினை பயனாகவே அமைகிறது என்ற உண்மையை உணர வேண்டும். நம் கருத்துக்கு பொருந்தாத எதுவும் நம் வாழ்க்கையில் இடம் பெறப்போவது கிடையாது. கருமையத்தில் இருந்தே ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையில் நிகழ்ச்சிகளாக உருவாகிறது. கர்மவினை பதிவுகளே அனைத்துக்கும் மூல காரணம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு அதற்கு தக்கவாறு செயல் பண்பில் உயர்வு காண்போம். வாழ்க வளமுடன்...
🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment