வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 24
♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️
🔥 இன்றைய நித்தியக்கடன்
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 இன்றைய சாதகம்
🔥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🔥 இன்றைய நற்சிந்தனை
🔥 மனித வாழ்க்கை என்பது மற்ற ஜீவராசிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். மற்ற ஜீவ இனங்கள் மகிழ்போகம் என்ற விதி அமைப்பின் கீழ் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் ஈதல், இரவாமை, மகிழ்போகம் என்ற விதி அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆதலால் வாழ்க்கை என்பது வெற்றியோ, தோல்வியோ அல்ல. அது முழுக்க முழுக்க முயற்சி. கடை நிலைக்கு சென்று சேரும் வரையிலான முயற்சி. சோர்வுக்கு சற்றும் இடம் கொடுக்காமல் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட வேண்டிய முயற்சி...
🔥 இன்றைய தற்சோதனை
🔥 புலன் அளவிலும் உடல் அளவிலும் அனுபவித்து மாண்டு போவது விலங்கினங்கள். இந்த சின்னஞ்சிறிய வாழ்க்கையை வாழ்வதற்காக நாம் இந்த பூமியில் உருவாகவில்லை. நம்முடைய கடமையும் பொறுப்பும் அகன்று, விரிந்து, ஆழ்ந்து, நிலைத்து, நீடித்து இயங்க கூடியதாகும். இயற்கையின் சிறப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மனிதனாக தனித்துவத்தோடு உருவாகி இருக்கிறோம். ஆனால் இந்த ஆற்றல்கள் அனைத்தும், சரியான செயல்கள் மூலம் வெளிப்படுவதற்காக மனிதனுக்குள் உள்ளடங்கி இருக்கிறது.
🔥 இன்றைய பண்புப்பயிற்சி
🔥 மனவளக்கலை பயிற்சி ஒவ்வொரு பகுதிக்கும் மனிதனுக்குள் உள்ளடங்கி இருக்கக்கூடிய, அந்த மாபிரம்ம ஞானத்தை உணர்வதற்கான தூண்டுதலாகவும் உந்துதலாகவும் உள்ளிருந்து செயல்படும். ஆக நாள் தவறாமல் பயிற்சிகளை மேற்கொண்டு, சிறுக சிறுக நம் உயிரில் சேர்க்கக்கூடிய தூய ஆற்றல் பெருவெள்ளமாக பெருகி, உள்ளிருந்து வெளியிலுள்ள ஆற்றளோடு ஒன்றிணையும். இந்த நிகழ்ச்சியை தான் முக்தி என்று அழைக்கின்றோம். வாழ்க வளமுடன்...
🔥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🔥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment