நித்தியக்கடன் ஜூலை 23 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 23


👣🌾👣🌾👣🌾👣🌾👣🌾👣


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔰 இன்றைய சாதகம்


🔰 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

🔰 இன்றைய நற்சிந்தனை


🔰 அன்பர்கள் நண்பர்கள் அனைவரும் கூடி நன்றி உணர்வுடன் நாம் இவ்வுணவை உண்ண துவங்குவோம் உடல்நலத்திற்கே. எண்ண விழிப்புடன், இவ்வுணவு அளவுடன் உச்சியில் நினைவை வைத்துக் கொள்வோம். உண்போம் இனிய நினைவோடு இவ்வுணவை உடல்நலம், ஆயுள், உயர் புகழ், அமைதி, இடமதன் தூய்மை எல்லாம் அமைக. இவ்வுணவு அளித்தோர் இறைவன் அருளால் எவ்வகையாலும் ஏற்றமாய் வாழ்க. எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுவோம்‌ நல்லதோர் உணவினை நமக்கே அளித்தோர் வாழ்க வளமுடன் உலக உயிர்களெல்லாம். வாழ்க! வாழ்க! வாழ்க வளமுடன். காயகற்ப கலை கற்றோர் அனைவரும் தூய மனதோடு பத்து தடவைகள் நரம்பூக்கம் எனும் நல்லதோர் பயிற்சியும், சிரம் வித்தேரி சிந்தனை உயர ஓஜஸ் மூச்சு ஓரிரு தடவைகள் தேஜஸ் உயர்ந்திட செய்தூண் உண்போம்.


         *வேதாத்திரி மகரிஷி

                ஞானமும் வாழ்வும்*


🔰 இன்றைய தற்சோதனை


🔰 தினந்தோறும் உணவை உண்பதற்கு முன் உணவுப் பாடலையும், காயகற்ப பயிற்சியையும் செய்துவிட்டு உணவை உண்போம். இந்த உணவு பாடலில் மகரிஷி கொடுத்துள்ள வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து அதில் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து கொள்வோம். இவ்வாறாக செய்யும் போது ஏற்படக்கூடிய விளைவுகளை கூர்ந்து கவனியுங்கள்.  மனதிற்கும், உடலிற்கும், உயிருக்கும் இது எவ்வாறெல்லாம் நன்மைகளை தருகிறது, பயன்படுகிறது, என்பதை தற்சோதனை செய்யுங்கள். விளக்கத்தோடு வாழ்க்கையை விரிவாக வாழ்வோம்.


🔰 இன்றைய பண்புப் பயிற்சி


🔰 நாள் தவறாமல் ஒவ்வொரு வேளை உணவுக்கு முன் உணவு பாடலை சொல்லிவிட்டு, காயகல்ப பயிற்சியையும் செய்யும், பண்பை வளர்த்துக்கொண்டு இதற்குள் இருக்கும் செயல் விளைவையும், இதனை ஆசான் எதற்காக அன்போடு அருளினார்கள் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.இந்த சிறப்பான பண்பைபில் உயர்ந்து உலக மக்களோடு இதனை பகிர்ந்து கொண்டு வாழ்வோம். வாழ்க வளமுடன்...

 

🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔰 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments