வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 19
🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ மனிதர்களுடைய வாழ்க்கை ஞானேந்திரியங்கள் வழியாகவும் கர்மேந்திரியங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. ஞானேந்திரியங்கள் என்பது தோல், நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள் இவையே ஆகும். மேலும் புலன்களுக்கு ஞான கருவிகள் என்ற பெயரும் உண்டு. கர்மேந்திரியங்கள் என்பது கைகள், கால்கள், வாய், பாலுறுப்பு, ஆசனவாய் இவையே ஆகும். தொழில் கருவிகள், செயல் கருவிகள் என்ற பெயரும் உண்டு. இந்த கர்ம ஞான இந்திரியங்களை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ நம்முடைய பலமும் பலவீனமும் இந்த கர்ம ஞான இந்திரியங்கள் தான். இவைகளை நாம் சரியான முறையில் கையாள பழகிக் கொண்டால் அது நமக்கு எல்லா வகையிலும் நன்மைகளையே தரும். மாறாக இவைகளை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்றால், அங்கே உடலிலும் மனதிலும் பலவிதமான நோய்த்தொற்றுகள் உருவாகும். ஜீவகாந்த செலவு, உயிர் துகள்கள் இழப்பு என அனைத்தும் நடைபெறும். தற்சோதனை செய்து இந்த இழப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். கர்ம ஞான இந்திரியங்களை விழிப்பு நிலையோடு பயன்படுத்துவோம்.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ பஞ்சேந்திரிய தவத்தின் பயனாக ஞானேந்திரியங்கள் முறை படுத்தப்படுகின்றன. அவைகள் அறிவின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கான வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கர்ம ஞான இந்திரியங்களை சரியான புரிதலோடு பயன்படுத்தினால்தான், நாம் ஞானத்தை நோக்கி பயணிக்க முடியும். இந்த கர்ம ஞான இந்திரியங்கள் இல்லாமல், இவைகளை கடக்காமல், நாம் ஞானத்தின் கதவுகளை திறக்க இயலாது. ஞான கதவைத் திறக்கும் திறவுகோல் இந்த கர்ம ஞான இந்திரியங்களே ஆகும். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment