நித்தியக்கடன் ஜூன் 19 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 19


🌀♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️🌀


⛳ இன்றைய நித்தியக்கடன்


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


⛳ இன்றைய சாதகம்


⛳ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

⛳ இன்றைய நற்சிந்தனை


⛳ மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் சிக்கல்களும், இன்னல்களும், இடர்பாடுகளும் உருவாகிறதோ அப்போதெல்லாம் நாம் நேர்மறையானஆற்றலை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உடல் நிலை, மனநிலை, வாழ்க்கை சூழ்நிலை என இவை அனைத்தும் நலமாக இல்லை என்றால் அது எதிர்மறையான ஆற்றலால் நாம் சூழப்பட்டு உள்ளோம் என்று அர்த்தம். இந்த எதிர்மறையான ஆற்றலுக்கு நேர் எதிராக வினை ஆற்றக்கூடிய நேர் மறையான ஆற்றலை அதிகரித்துக் கொள்ளவதைத் தவிர, வேறு வழியே நமக்கு இல்லை. எப்படி அதிகரிப்பது? அதற்கான வழிமுறைகள் என்ன? என்றால்...


⛳ இன்றைய தற்சோதனை


⛳ நல்ல புத்தகங்களை படித்தல், நல்ல கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுதல், நல்ல சிந்தனை உரைகளை கேட்டல், கூட்டுதவங்களில் கலந்து கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களோடு இணக்கமாக இருத்தல், உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவையெல்லாம் நல்ல செயல் முறைகள் ஆகும். மேலும் வாழ்த்தும்போது அந்த வாழ்த்து நமக்குள் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கிறது. மனித வாழ்க்கை என்பது ஒருவர்  மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. இது சமுதாயத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் இணைத்துக் கொண்டதேயாகும், ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் அங்கத்தினர் ஆவார்கள். சமுதாயத்தையும் வாழ்த்தி நேர்மறையான ஆற்றலால் சீர்திருத்தங்களை உருவாக்க வேண்டும்.


⛳ இன்றைய பண்புப்பயிற்சி


⛳ உடலில் ஏதேனும் துன்பம் இருந்தாலும் அந்த பகுதியை அந்த உறுப்பை நினைத்து வாழ்த்துங்கள், படிப்படியாக உடல் நலம் பெறும். மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தாலும் உடல் முழுவதும் "அருட்பேராற்றல் அலை அலையாக பாய்வதாக" பாவனை செய்துகொண்டு அந்த காந்த உடலை வாழ்த்துங்கள் மனக்குழப்பம் நீங்கும். உடலும், மனமும் சீராக இயங்குவதற்கு உயிர் பலம் தேவை. உயிர் பலத்தை உருவாக்க கவலை, கோபம், சினம் இந்த மூன்றையும் தவிர்த்து பழகுங்கள். உயிர் பலம் பெற்று இயங்கும் இந்த பண்புகளில், நாமும் வாழ்ந்து நம்முடைய சந்ததிகளும் வாழ வழிவகைகள் செய்வோம். வாழ்க வளமுடன்...

 

⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


⛳ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments