வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 16
💠🔶💠🔶💠🔶💠🔶💠🔶💠
🍀 இன்றைய நித்தியக்கடன்
🍀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍀 இன்றைய சாதகம்
🍀 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🍀 இன்றைய நற்சிந்தனை
🍀 உங்களுடைய மனம் எப்போது முன்னுக்கு பின்னாக, மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்காமல், புலன் மயக்கத்தில் விளைவைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் ஒரு செயலை செய்யத் தூண்டுகிறதோ, அப்போது நீங்கள் தாராளமாக முடிவு செய்துவிடலாம் நாம் இறைநிலையை உணர்வதற்கு உண்டான தகுதியை பெற வில்லை என்று.
🍀 இன்றைய தற்சோதனை
🍀 எவ்விதத்தில் மனம் இருந்து இயங்கினால் ஞானம் விளையுமோ, அது எவர் ஒருவருக்கும் துன்பம் செய்யாமல், எண்ணாமல், பேசாமல் வாழும் வாழ்க்கை முறைதான் எல்லாம் வல்ல இறை ஆற்றலை, தெய்வத்தை உணர்வதற்கான, தகுதியை உயர்த்துகிறது. இந்த தகுதி உயர்வுக்கு தற்சோதனை செய்து தன்னை எப்போதும் அதற்கு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மனதில் தான் ஞானம் முளைக்கத் துவங்கும்.
🍀 இன்றைய பண்புப் பயிற்சி
🍀 ஞானம் என்பதை பெரிதாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவைகள் வழியாக துன்ப விளைவை ஏற்படுத்திக் கொள்ளாத பண்புக்கு பெயரே ஞானம். வேறு ஏதோ என்று நீங்கள் விளங்கிக் கொண்டாலோ அல்லது இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாவிட்டாலோ முடிவு செய்து கொள்ளலாம் நாம் அதற்கான (ஞானம் முளைப்பதற்கான) வாய்ப்பிலிருந்து விலகி நிற்கிறோம் என்று. வாழ்க வளமுடன்...
🍀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🍀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment