நித்தியக்கடன் ஜூலை 06 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 06


❄️🕳️❄️🕳️❄️🕳️❄️🕳️❄️🕳️❄️


⛳ இன்றைய நித்தியக்கடன்


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


⛳ இன்றைய சாதகம்


⛳ வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.

 

⛳ இன்றைய நற்சிந்தனை


⛳ உங்களுடைய தோல், கண்கள், பற்கள், மூக்கு, காது, முகம், கூந்தல், மற்றும் உடலுக்கு தேவையான அனைத்தும் எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தினால் மேலும் நீங்கள் அழகாகி விடுவீர்கள். உங்களை அழகுபடுத்திக் கொள்ள எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். இது மாதிரியான விளம்பரங்களுக்கும் அவைகள் சார்ந்த பெருட்களுக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுப்பீர்களேயானால், நாம் இன்னமும் புலன் இயக்க மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்று அர்த்தமாகும்...


⛳ இன்றைய தற்சோதனை


⛳ புலன்கள் என்றால் என்ன? புலன்களுக்கும் நமக்குமான உறவு முறை எப்படி இருக்க வேண்டும். ஐம்புலன்களிலிருந்து ஞானத்திற்கு எப்படி பயணிப்பது என்ற சரியான புரிதல் வேண்டும். புலன் இன்பங்களை கடப்பது என்றால் அறவே புலன்களை பயன்படுத்தாமல் இருப்பது அல்ல, அளவு முறையோடு பயன்படுத்துதல். தற்காலத்திலும், பிற்காலத்திலும், உயிர் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் எந்தவிதத்திலும் துன்பம் இல்லாமல் புலன்களை பயன்படுத்துவதே ஆகும்.


⛳ இன்றைய பண்புப்பயிற்சி


⛳ எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தித்தான் இந்த புலன்களை கடக்க முடியும். சுவை உணர்வு, ஸ்பரிச உணர்வு, வாசனை உணர்வு, பார்வை உணர்வு என அனைத்து வழிமுறைகளிலும் புலன்களுக்கு நுணுக்கமான பயிற்சி கொடுத்தல். சுவையில்லாத உணவிலும் உள்ள சுவையை உணர்தல், சாலைகளில் செல்லும்போது துர்நாற்றம் வீசும் பகுதியை இயல்பாக கடந்து செல்லுதல், என எல்லா வகையிலும் புலனின்ப ஆர்வத்தை குறைத்து பழகுங்கள். சீவகாந்த்தை சேமித்து வாழ்வதே புலன்களுக்கு அப்பால் வாழும் வாழ்வாகும். வாழ்க வளமுடன்...

 

⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


⛳ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments