நித்தியக்கடன் ஜூன் 18 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 18


🚥🌍🚥🌍🚥🌍🚥🌍🚥🌍🚥


🌿 இன்றைய நித்தியக்கடன்


🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌿 இன்றைய சாதகம்


🌿 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

🌿 இன்றைய நற்சிந்தனை


🌿 நம்முடைய நிலைப்பாடு (status) என்ன என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இது சரியாக புரிந்து கொள்ளாத போதுதான் பலவிதமான சிக்கல்களை வாழ்க்கையில் ஏற்படுத்தி விடுகிறோம். நம்முடைய நிலைப்பாடு (status) நாளுக்கு நாள் உயர்வு காண வேண்டும். இந்த நிலைபாட்டை (status) அடிப்படையாகக் கொண்டு தான் நம்முடைய எதிர்காலத்தை இறைநிலை தீர்மானிக்கிறது. நிலைப்பாடு (status) என்பது பணமோ, சமுதாயத்தில் மதிப்போ, மரியாதையோ அல்ல நம்முடைய மனசாட்சி நம்மை மதிப்பதே ஆகும்.


🌿 இன்றைய தற்சோதனை


🌿 நம்மை நாம் தெளிவாக உணர வேண்டுமானால்..? நான் என்ற பொருளோடு சரியாக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருளாக இருப்பது அறிவு. உயிர் மீது மனம் செலுத்தி மனதை பக்குவப்படுத்த, பக்குவப்படுத்த தான் நான் யார் என்று புரிதல் ஏற்படும். அது வரையில் அது ஒரு மாயையான நிலையாகவே இருக்கும். உயிரோடு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு உயிருக்கு உகந்த செயல், செய்து சிறப்பாக வாழ்வோம். உயிரைப் பற்றி எல்லா நிலைகளிலும் தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.


🌿 இன்றைய பண்புப் பயிற்சி


🌿 உயிருக்கு பொருத்தமான செயல் பண்பையே வாழ்க்கையாக வாழவேண்டும். உயிருக்கு எதிரான செயல்பாடுகளில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ளாமல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு கவனம் செலுத்தாமல் இருந்து விட்டால் நாம் துன்பத்தையே அனுபவமாக பெற வேண்டி வரும். ஆதலினால் உயிருக்கு உகந்த செயல் பண்பில் உயர்வோம். இந்தப் பண்பே அறிவே நாம் என்ற தகுதியை  நமக்குள் உயர்த்துகிறது. என்ற உண்மையை உணர்வோம். வாழ்க வளமுடன்...

 

🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌿 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments