வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 10
🕳️🎭🕳️🎭🕳️🎭🕳️🎭🕳️🎭🕳️
🔶 இன்றைய நித்தியக்கடன்
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 இன்றைய சாதகம்
🔶 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🔶 இன்றைய நற்சிந்தனை
🔶 ஒரு மரத்தில் மொட்டுக்கள் பூத்து காய்கள் காய்க்க வேண்டுமானால் அதற்கென்று ஒரு காலம் நிச்சயமாக தேவை. இதற்கு இடையில் அந்த மரத்திற்கு நல்ல உரமும், மண்வளமும், நீர் பாசனமும்,சூரிய வெப்பமும் தேவை. இது போலத்தான் ஒரு மனிதனுக்குள் (ஞானம்) அறிவு முழுமை பெற வேண்டுமானால், பல விஷயங்கள் ஒன்று சேர வேண்டும். அப்படி ஒன்று சேர்ந்த அமைப்புக்கு நடுவில் ஞானம் முளைத்து தழைத்து ஓங்கும்.
🔶 இன்றைய தற்சோதனை
🔶 எல்லா மனிதர்களுக்குள்ளும் ஞானம் இருக்கிறது. அதனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவரவர்களுடைய பொறுப்பும், கடமையும் ஆகும். எந்த பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயலாற்றும் போது அதுவே யோகசாதனை என்று பேசப்படுகிறது. இந்த யோக சாதனை எல்லா மனிதர்களுக்கும் பூமியில் சாத்தியமே தற்சோதனைகள் மட்டும் தான் இந்த யோக சாதனையை நமக்குள் நிலை நிறுத்த வல்லது
🔶 இன்றைய பண்புப் பயிற்சி
🔶 தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள வேண்டும். உடலால், உயிரால், மனதால் நம்மை நாமே உயர்த்திக் கொள்ளும் இந்த பண்பு தான் நமக்கும் இறைவனுக்குமான இடைவெளியை குறைக்கும். இந்த பண்பில் நாம் எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் போது, சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இயல்பாகவே வாழ்க்கையாக மலரும் இந்த வாழ்வை முழுமையாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🔶 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment