வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 09
🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁
♾️ இன்றைய நித்தியக்கடன்
♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♾️ இன்றைய சாதகம்
♾️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
♾️ இன்றைய நற்சிந்தனை
♾️ எண்ணங்கள் அனைத்தும் பதிவுகளின் தூண்டுதல் என்றால், நமக்கு எழக்கூடிய எண்ணங்கள் அனைத்திற்கும் நாம் காரணம் இல்லை எனும்போது, நாம் எப்படி வேண்டுமானாலும் எந்த செயலை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா? இப்படி ஒரு கேள்வியை கேட்டு இதனுடைய பதில் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம். நமக்கு உள்ளும் புறமும் இருக்கும் பேருண்மை எவ்வாறு நமக்குள் இயங்குகிறது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
♾️ இன்றைய தற்சோதனை
♾️ எல்லா வகையான பதிவு தூண்டுதல்களுக்கும், எண்ணங்களுக்கும் செயல்களை செய்துவிட்டு வாழ்க்கையை துன்பமாக்கிக் கொள்ளக் கூடாது. வித்துத் தொடராகவும் பிறவி தொடராகவும் இந்த மனிதவுடல் நமக்கு கிடைத்திருக்கிறது. எல்லா வகையான பதிவு தூண்டுதலுக்கும் ஐந்தறிவு ஜீவராசிகள் வரை செயல் செய்வது சரியே. ஆனால் மனிதர்களுக்கு ஆறாவது அறிவு சீர்திருத்தத்திற்காகவே உருவாக்கப்பட்டது. உணர்ச்சிவயப்பட்ட நிலையிலிருந்து உணர்வோடு வாழ்வதற்காகவே வந்து அமைந்தது. இந்த அடிப்படையின் கீழ் நாம் எந்த தவறையும் செய்யக்கூடாது என்பதும், இதை மீறும்போது இதன் விளைவு உடல் நோயாகவும், மனக்குழப்பமாகவும், வாழ்க்கை சிக்கலாகவும் அமைந்து விடுகிறது.
♾️ இன்றைய பண்புப் பயிற்சி
♾️ சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இதுவே மனிதன் வாழ வேண்டிய பண்பாகும். இந்தப் பண்புகளில் உயர்வதற்காகவே இந்த மனித கருமையம் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதிலிருந்து விலகாமல் உங்களுடைய பிழைகளை திருத்திக் கொள்வதற்காகவே இந்த மனித உடலையும், கருமையத்தையும் இறை நிலையால் அன்போடு வழி நடத்தப்படுகிறது. இந்த பண்பில் உயர்வோம் சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் வாழ்க வளமுடன்...
♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♾️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment