வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 08
🔰🌌🔰🌌🔰🌌🔰🌌🔰🌌🔰
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 மனிதர்கள் வாழ்க்கையில் செயற்கை தன்மைகள் அதிகரிக்க அதிகரிக்க, இயற்கையை விட்டு பிரிந்து விலகி மனிதனை மனிதன் அழித்து கொள்ளக்கூடிய, கொடுமையான காலகட்டத்தில் இன்றைய மனித சமுதாயம் இருந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனிதனுடைய உடலையும், உயிரையும், மனதையும் கேடாக்கும் அனைத்து திட்டங்களும், திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. செயற்கையாக உருவாக்கப்பட்டு நம்மை சுற்றி இருக்கும், அனைத்து விதமான பயன்பாடுகளும் விதவிதமாக நம்மை மயக்குகிறது. நமக்குள் நுழைந்து நம்மை ஆளுமை செய்கிறது. இவை எல்லாம் மறைமுகமான மிகக் கொடுமையான அணு ஆயுதமாகும். இது கொடூர விஞ்ஞான அரக்க தன்மையின் உச்சகட்டமாகும்.
🍥 இன்றைய தற்சோதனை
🍥 விரும்பியோ, விரும்பாமலோ, நேரடியாகவும், மறைமுகமாகவும், தெரிந்தும், தெரியாமலும், நன்மைக்காகவும், ஒற்றுமைக்காகவும் இந்த உலகத்தில் ஏதோ ஒன்றிற்கு நாம் பதிவராக (Subscriber) இருந்து கொண்டிருக்கிறோம். நம்மை சுற்றி நிறைய மென்பொருள் (software), சாதனம் (Devices), வலைதளங்கள் (internet), பயன்பாடுகள்(Apps) என இவைகளெல்லாம் வேறு வேறு ரூபத்தில் நம் மனதிலும் உடலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இது உடல்நோய்களையும், மனநோய்களையும் நமக்கே தெரியாமல் நமக்குள் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. மனிதன் வாழ்வில் சிரமங்களை குறைக்க கண்டுபிடிக்கப்பட்ட கணினி(computer) இன்று மனித உடலிலும், மனதிலும், அறிவிலும் நுண்கிருமிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 தன்னார்வத்தோடு வாழ்வை எளிமை படுத்திக் கொண்டு, அளவுக்கு மீறிய தேவைகளை வசதி வாய்ப்புகளை விட்டு வெளியே வாருங்கள். உண்மையோடும் கண்ணியத்தோடும் வாழ்வோம். "ஓர் உலக ஆட்சி, உயர் ஒழுக்கத்தோடு உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம், பார்முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி, பலநாளும் ஒன்றிணைந்த பொருளாதாரம், சீர்திருத்த சிக்கனம் சிறந்த வாழ்வு, தெய்வநிலை அகத்துணரும் இறைவணக்கம், நேர்வழியில் விஞ்ஞானம் பயனாய் கொள்ளும் நெறிமுறைகள், இவை இணைந்த வாழ்வு காண்போம்" வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🍥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment