வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 07
💯♻️💯♻️💯♻️💯♻️💯♻️💯
🎼 இன்றைய நித்தியக்கடன்
🎼 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎼 இன்றைய சாதகம்
🎼 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🎼 இன்றைய நற்சிந்தனை
🎼 எந்த ஒரு இசைக்கருவி ஆனாலும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும். அக்கருவி தூய்மையாக இருந்தால்தான் நமக்கு நல்ல முறையில் அது பயன்படும். ஒரு இசை கருவியை வாசிக்க வேண்டும் என்று எண்ணுபவர், அதற்கு முன்னதாக அக்கருவியை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து சுருதி சுத்தமான இசையாக புறப்படும். இதுபோன்று பல இசை கருவிகள் ஒன்று சேர்ந்து முறையாக இசைக்கப்படும் போது, நல்ல இசைக்கோர்வையாக நம் மனதிற்கு அது இனிமையையும் அமைதியையும் கொடுக்கிறது.
🎼 இன்றைய தற்சோதனை
🎼 அது போல வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் என எண்ணும் ஒவ்வொரு மனிதனும் உடல், உயிர், மனம் இவைகளை பற்றிய புரிதலும் இவைகளை முறையாக வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல இசைக்கருவிகளை ஒருங்கிணைத்து ஒரு நல்ல இசைக்கோர்வை அமைக்க முடியும். அதேசமயம் அது இனிமையான முறையில் அமையவில்லை என்றால், அதனை கேட்பவர்களுக்கு அது வெறும் சத்தமாக மட்டுமே இருக்கும். இதுபோல மனிதனுடைய உடலும், உயிரும், மனமும் சிறந்த முறையில் இணைந்து இயங்கும்போது தான் அது நல்ல இனிமையை, மனநிறைவை, அமைதியை கொடுக்கிறது. இவைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இயங்கும்போது அதுவே நோயாகவும், மனக்குழப்பமாகவும், வாழ்க்கை சிக்கலாகவும் உணரப்படுகிறது...
🎼 இன்றைய பண்புப்பயிற்சி
🎼 இந்த பூவுலகில் பிறந்த அனைவருக்கும் இனிமையாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த இனிமை, அமைதி, நிம்மதி இவை அனைத்தும் ஒரு செயலில் விளைவாக அமைவது இல்லை. இந்த விளைவுகள் நல்ல முறையில் அமைய வேண்டும் என்றால் அதற்கு தகுந்த செயல்களை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். செயல்களை எப்படி வேண்டுமானாலும் செய்துவிட்டு, விளைவு மட்டும் நன்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமை ஆகாது. உயிர் அறிவை உணர்வோம், அதில் நாம் அனைவரும் உயர்வோம்... வாழ்க வளமுடன்...
🎼 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎼 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🎼 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment