நித்தியக்கடன் ஜூன் 05 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 05


🎲♨️🎲♨️🎲♨️🎲♨️🎲♨️🎲


👣 இன்றைய நித்தியக்கடன்


👣 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


👣 இன்றைய சாதகம்


👣 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

👣 இன்றைய நற்சிந்தனை


👣 இந்த பூமியை சுற்றி பல தரப்பட்ட மண்டலங்கள் இருக்கின்றன. காற்று மண்டலம், வெப்ப மண்டலம், ஓசோன்  மண்டலம், ஹீலியம் மண்டலம் என பலதரப்பட்ட மண்டலங்கள் இருக்கின்றன. இந்த மண்டலங்கள் எல்லாம் இந்த பூமியையும் பூமியில் வாழும் உயிர்களையும் பாதுகாக்கின்றது. இந்த பாதுகாப்பு வளையம் சிறப்பான முறையில் இருக்கும் வரையில் தான் நம்முடைய வாழ்க்கை நம்பகத்தன்மை உடையதாக இருக்கும்.


👣 இன்றைய தற்சோதனை


👣 இயற்கையை மாசுபடுத்தி விட்டு இந்த பூமியில் நம்மால் நம்பிக்கையோடு காலத்தை கடத்த இயலாது, வாழ்க்கையை வாழ முடியாது. மாசுகளிலிருந்து இந்த பூமியை பாதுகாப்பது நம்முடைய வாழ்க்கையை நாமே பாதுகாத்துக் கொள்வதே ஆகும். அது வேறு இது வேறு அல்ல. நம்முடைய வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டுமானால் இயற்கையை பாதுகாத்தே ஆக வேண்டும். இன்னும் ஒரு படி மேலே சென்று இயற்கையை மதித்தால் மட்டும் தான் நம்முடைய வாழ்க்கை பாதுகாப்பானதாகவும், மதிப்புடையாதகவும் இருக்கும்.


👣 இன்றைய பண்புப் பயிற்சி


👣 மீண்டும் மீண்டும் பிழைகளிலிருந்தும், தவறுகளிலிருந்தும், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும் பண்பில் உயரவேண்டும். இது ஒரு நாள் இரண்டு நாளில் முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம். இருப்பினும் அதற்கான நல்லதோர் சரியான திட்டத்தை வகுத்துக் கொண்டு பிழைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பண்பில் உயர்வோம். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும் பிழைகளை திருத்தம் செய்து கொண்டு சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இவற்றை நடைமுறைபடுத்தி இறை ஞானத்தோடு வாழ்வோம். வாழ்க வளமுடன்...

 

👣 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


👣 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


👣 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments