வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 03
🌿♾️🌿♾️🌿♾️🌿♾️🌿♾️🌿
💦 இன்றைய நித்தியக்கடன்
💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💦 இன்றைய சாதகம்
💦 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
💦 இன்றைய நற்சிந்தனை
💦 இந்த பிரபஞ்ச தன் மாற்றத்திற்கு எல்லாம் ஒரே ஒரு மூலமான உணர்வே அடிப்படையாக இருக்கிறது. அந்த ஒரு உணர்வின் எழுச்சியே காந்தம், இறைத்துகள்கள், பஞ்சபூதங்கள், கோடான கோடி நட்சத்திரங்கள், சூரிய குடும்பங்கள், பேரியக்க மண்டலம் அனைத்துமாகும். இறைநிலையின் தன்மாற்றம் அனைத்திற்கும் ஒரே ஒரு உணர்வையே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அந்த உணர்வு, "பகிர்வுணர்வு" தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மற்றொன்றோடு பகிர்ந்து கொள்வதற்காக எடுத்த முயற்சியே அணு சேர்க்கை, அணுச்சிதைவு.
💦 இன்றைய தற்சோதனை
💦 இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள "அணு இயக்கக் கோட்பாடு" இரண்டே இரண்டுதான். ஒன்று அணு சேர்க்கை, மற்றொன்று அணுச்சிதைவு, இந்த அணுக்கள் சேருவதற்கும் சிதைவதற்கும் இந்த பகிர்வுணர்வே மூல காரணமாகும். ஒவ்வொரு அணுவும் தான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறது, அணுசேர்க்கை ஏற்படுகிறது, இந்தக் கொத்தியக்க அனுபவம் அனைத்தும் இந்த பிரபஞ்சமாகவும் உயிரினங்களாகவும் பரந்து விரிந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சேர்க்கை அனைத்தையும் உங்கள் ஆழ்மனதிற்கு சென்று நின்று நிதானமாக தற்சோதனை செய்து விளங்கிக் கொள்வோம்.
💦 இன்றைய பண்புப் பயிற்சி
💦 மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு மனிதர்களுக்குள் பல்வேறுபட்ட கிளை உணர்வுகளாக, எண்ணங்களாக உருமாறிவிட்டது. பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் இவற்றில் சிக்கி இந்த உணர்வு தன்னுடைய இயல்பு தன்மையை இழந்து விட்டது. நல்லவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள் நல்லவை மற்றவர்கள் உணர உதவுவோம். அதற்கு முன் தான் உணர்ந்து மற்றவர்களுக்கு உணர்த்துவதே ஞானப் பண்பாகும், இப்பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
💦 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💦 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
💦 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment