நித்தியக்கடன் ஜூன் 01 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 01


🔶🌾🔶🌾🔶🌾🔶🌾🔶🌾🔶


☄️ இன்றைய நித்தியக்கடன்


☄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


☄️ இன்றைய சாதகம்


☄️ வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.

 

☄️ இன்றைய நற்சிந்தனை


☄️ நல்ல பழக்க வழக்கங்களும், நல்ல சிந்தனைகளும், நல்ல செயல் முறைகளும் நம்மிடையே பரவலாக இருக்க வேண்டுமானால். நாம் அதற்குரிய பயிற்சி முறையில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்த வழிமுறைகளை பின்பற்றும் போது, அவைகளைப் பற்றிய உண்மைகளை தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய கால சக்கரமும், வாழ்க்கை சூழ்நிலையும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகும்...


☄️ இன்றைய தற்சோதனை


☄️ ஏன் நாம் இந்த நல்ல செயல்களை பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்?. அப்படியானால்! நம்மிடையே இப்போது இருக்கக்கூடிய பழக்கவழக்கங்கள் நல்லவைகள் இல்லையா? என்றால் வேண்டியவைகளும் இருக்கின்றன, வேண்டாதவைகளும் இருக்கின்றன. நன்மைக்கும் தீமைக்கும் உருவானது தான் இந்த மனித சமுதாயம். தீமையோடும், நன்மையோடும் இந்த உலகிற்கு வந்திருக்கும் நாம், தீமைகளை குறைத்துக் கொண்டு நன்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நன்மைகள் பற்றியும் தீமைகள் பற்றியும் நமக்கு தெளிவாக தெரிந்தால் மட்டுமே அதிலிருந்து விலகி, எதனோடு இணைய வேண்டும் என்று முடிவெடுக்க முடியும்.


☄️ இன்றைய பண்புப்பயிற்சி


☄️ தேவையானவைகளோடு நம்மை இணைத்துக் கொள்ளவும், தேவையற்றவைகளை நம்மிடருந்து விலக்கிக் கொள்ளவும், இந்த பிறவி நமக்கு முழுமையாக அமைந்திருக்கிறது. ஐந்தறிவு ஜீவன்கள் வரையில் நாம் எல்லாவற்றிலும் கலந்து தான் வளர்ந்து வந்தோம். ஆறாவது அறிவு முழுக்க முழுக்க ஞானத்திற்கு உரியது. தீமைகளிலிருந்து விலகி நன்மையில் மட்டுமே வளர்ச்சி தரக்கூடிய இந்த மனிதப்பிறவிக்கு இந்த காலகட்டம் ஒரு போராட்டம் தான். இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் வேறு வழியே கிடையாது. நாம் இதிலிருந்து விலகி விட்டால் நம்முடைய அடுத்த தலைமுறை இதை சந்திக்க நேரிடும். நாமே சந்திப்போம் சரித்திரம் படைப்போம். வாழ்க வளமுடன்...

 

☄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


☄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


☄️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments