வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 28
🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾
☘️ இன்றைய நித்தியக்கடன்
☘️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
☘️ இன்றைய சாதகம்
☘️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
☘️ இன்றைய நற்சிந்தனை
☘️ சிக்கனம் என்ற செயல்பாட்டினை பொருளாதாரத்தோடு மட்டும் இணைத்து பார்க்காமல், நம் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தோடும் இணைத்து பார்க்க வேண்டும். உணவை அளவோடு உண்ணுதல் உணவு சிக்கனம், உணர்ச்சி வயம், கவலை, சினம் இவைகள் இல்லாமல் கவனத்தோடு வாழுதல் ஜீவகாந்த சிக்கனம். இவ்வாறு சிக்கனத்தை நாம் அன்றாட வாழ்க்கை செயல் பாடுகளோடு, இணைத்து பார்த்து வாழ்க்கையை எளிமையாக வாழ வேண்டும்.
☘️ இன்றைய தற்சோதனை
☘️ கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. இரண்டும் ஒன்று அல்ல. அன்றாட தேவைகளில் அளவோடு பணத்தை, உடல் உழைப்பை, எண்ணங்களை ஆக்கத் துறையில் செயல்படுத்துவது சிக்கனமாகும். இதை கூட செய்யாமல் உழைத்து சம்பாதித்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே வைத்துக் கொள்வதும், மேலும் இதற்கு தகுந்தார் போல் திட்டமிட்டுக் கொண்டு, எண்ணுவதும், செயல்படுவதும் கஞ்சத்தனமாகும்.
☘️ இன்றைய பண்புப்பயிற்சி
☘️ ஆடம்பரமாகவும் அடுத்தவர் பார்க்கவும் நாம் நம்முடைய வாழ்க்கையை வாழ கூடாது. நாம் வாழும் வாழ்விலிருந்து நல்ல பல விஷயங்களை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டும். அது தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கும் அவரவர் எண்ணம், சொல், செயல்களால் துன்ப விளைவு அமைந்து விடாமல் கவனத்தோடு வாழ்வதே சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் எனும், இறைஞானவாழ்வாகும். வாழ்க வளமுடன்...
☘️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
☘️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
☘️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment