வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 25
⚙️🌌⚙️🌌⚙️🌌⚙️🌌⚙️🌌⚙️
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 எந்த ஒரு புதிய பழக்கத்தையும் உலகம் ஏற்பதற்கு சிறிது காலம் ஆகும். அதுவரையில் நாம் அந்த கோட்பாட்டில் நின்று வாழ்ந்து காட்டத்தான் வேண்டும். ஆங்காங்கே சிறிது, சிறிது கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக அந்த உண்மையை விட்டு விலகி விடக்கூடாது எப்போதும், எக்காலத்திலும்.
🍥 இன்றைய தற்சோதனை
🍥 பழைய பழக்கங்களை முதலில் விளக்கத்தோடு நாம் புரிந்துகொண்டு அவைகளை முடிந்த அளவு சீர் திருத்தம் செய்வோம். மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது. குடும்பத்துக்குள்ளும் சரி, சமுதாயத்திலும் சரி புகுத்துதல் என்பது முறையான வழிமுறை கிடையாது. மாறாக அவர் அவரிடமிருந்து துவங்க வேண்டும்.
🍥 இன்றைய பண்புப் பயிற்சி
🍥 நாம் சிறந்த முறையில் வாழ்ந்து காட்டுவோம் அதை மற்றவர்கள் கட்டாயமாக பின்பற்றுவார்கள். இதுதான் இயல்பான உளவியலுமாகும் இந்த உண்மையை உணர்ந்து வேதாத்திரிய தொண்டாற்றி இன்பம் காண்போம். வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🍥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment