வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 20
♻️🔘♻️🔘♻️🔘♻️🔘♻️🔘♻️
🔶 இன்றைய நித்தியக்கடன்
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 இன்றைய சாதகம்
🔶 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🔶 இன்றைய நற்சிந்தனை
🔶 மனித வாழ்க்கையை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவை: உடல் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழும் உடல் சார்ந்த வாழ்க்கை, மனத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழும் மனம் சார்ந்த வாழ்க்கை, உயிர் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழும் உயிர் சார்ந்த வாழ்க்கை. உலக மக்களில் பெரும்பாலும் உடல் சார்ந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார்கள். பூர்வ புண்ணியத்தின் பலனாக சிலர் இயல்பாகவே மனம் சார்ந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். குண்டலினி யோகப் பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஒரு நபரால் மட்டுமே உடல், மனம், உயிர் சார்ந்த வாழ்க்கையை சிந்திக்கவும், ஆராயவும், புரிந்துகொள்ளவும் முடியும். மற்றவர் எவருக்கும் இது சாத்தியம் கிடையாது.
🔶 இன்றைய தற்சோதனை
🔶 விலங்கின பதிவுகளின் ஒட்டுமொத்த உருவமாக நாம் இந்த பூமியில் பிறந்து இருக்கிறோம். தெய்வத்தன்மை இடையிடையே அவ்வப்போது வந்து போகிறது. சிந்திக்க துவங்கிய நாள் முதல் கொண்டு மனிதர்கள் தனக்கு தேவையான பல விதமான பொருள்களையும், விஞ்ஞான கருவிகளையும் கண்டுபிடிக்க துவங்கினார்கள். இந்த ஆராய்ச்சியின் உச்சகட்டமாக உயிரைப் பற்றியும், இறைவனைப் பற்றியும், மனதைப் பற்றியும், இயற்கையை பற்றிய உண்மைகளை ஆய்வு செய்து தனக்குள்ளாக, உணர்ந்து கொள்வதற்கான முயற்சியில் மனிதர்களை இறைவன் உள்ளிருந்து தூண்டி விடுகின்றான்.
🔶 இன்றைய பண்புப்பயிற்சி
🔶 பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த வாழ்க்கையில், இறப்பதற்கு முன்பாக நாம் இறைவனையும், உயிரையும் உணர வேண்டும். அப்போது தான் இந்த பிறவி முழுமைபெறும். அதுவரையில் அரைகுறையான வாழ்க்கையைத் தான் வாழ்வதாக அர்த்தம். நம் கருமையத்திலிருந்து விளங்கினப் பதிவுகளை நீக்கிக் கொண்டு, மேலும் அவைகளை நீக்கும் படியான பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தன்னுடைய தேவைகளை முறைப் படுத்திக் கொள்ளும் மனிதனுக்கு மட்டும் தான் இறைஞானம் சாத்தியமாகும். நம்மால் முடியாதது என்று எதுவுமே கிடையாது. முடியும் என்று முயற்சிப்போம் அறிவில் முழுமை பெறுவோம். வாழ்க வளமுடன்...
🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🔶 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment