நித்தியக்கடன் ஏப்ரல் 18 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 18


🌌☘️🌌☘️🌌☘️🌌☘️🌌☘️🌌


🌏 இன்றைய நித்தியக்கடன்


🌏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌏 இன்றைய சாதகம்


🌏 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

 

🌏 இன்றைய நற்சிந்தனை


🌏 இந்த பூமியில் மனிதர்களாகிய நாம் இறுதித்தத்துவமாக (கோட்பாடு, கட்டமைப்பு, இயக்க ஒழுங்கு) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த காலத்தில் தொன்னூற்றி இரண்டு மூலகங்கள் (அணுக்களின் தொகுப்புகள்) என்று சித்தர்கள் கண்டறிந்தார்கள். தத்துவங்கள் என்ற பெயரில் அவைகளை விரிவாக விளக்கி இருக்கிறார்கள். இன்று விஞ்ஞானத்தில் அதே அணுக்களின் தொகுப்புகளை நூற்றி மூன்று (elements) என்று கண்டறிந்திருக்கிறார்கள். அணுக்களின் கூட்டு இயக்க தொகுப்பு தான் இந்த பஞ்ச பூதங்கள். இந்த பிரபஞ்சம் முதல் ஓர் அறிவிலிருந்து ஆறறிவு கொண்ட மனிதன் வரை முழுக்க முழுக்க அணுக்களால் உருவானவா்களே...


🌏 இன்றைய தற்சோதனை


🌏 நீண்ட நெடிய பயணத்திற்கு பின் நாம் இன்று இந்த மனித உருவத்தில் இருக்கிறோம். நம்முடைய வரலாறும் கதையும் மிகவும் பெரியது. இந்த வரலாற்று உண்மைகளை நாம் உணர்ந்து கொள்வதற்காகவே இந்த மனித உருவமும் அமைந்திருக்கிறது. எதன் வழியாக நாம் பயணப்பட்டு வந்தோமோ, அதன் வழியாகவே தான் மீண்டும் சென்று நம்முடைய மூலத்தோடு இணைய வேண்டும். நூற்றி மூன்றாவது இடத்தில் இருக்கும் நாம் நூற்றி இரண்டு, நூற்றி ஒன்று, நூறு, தொன்னூற்றி ஒன்பது என்று படிப்படியாகத்தான் சென்று இறைநிலையை உணர முடியும்.


🌏 இன்றைய பண்புப்பயிற்சி


🌏 இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம் என்பது ஒருவழி பாதை. ஒன்றில் துவங்கி நூற்றி மூன்றில் நிறைவு பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அணுக்களின் கோட்பாட்டிற்கும் ஒவ்வொரு இரசாயன பண்புகள் உண்டு, குணங்கள் உண்டு. ஆக அவை அனைத்தையும் நாம் கடக்க வேண்டும். கடைநிலையில் இருந்து முதல் நிலைக்கு உண்டான, இந்த பயணத்தை "உள்ளுணர்வு கல்வி" மூலமாக மட்டுமே நிறைவு செய்துகொள்ள முடியும். குண்டலினி யோகத்தில் இதனையே யோக சாதனை என்று பேசுகிறோம். இதற்காகத்தான் இந்த குண்டலினி யோகத்தை அகநோக்கு பயணம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். தெளிவான சிந்தனையோடு தேர்ச்சி பெருவோம். வாழ்க வளமுடன்...

 

🌏 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌏 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌏 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments