வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 15
🍁🍥🍁🍥🍁🍥🍁🍥🍁🍥🍁
💠 இன்றைய நித்தியக்கடன்
அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 நாம் அன்றாட உபயோகப் படுத்தக் கூடிய எந்த ஒரு பொருள் மீதும் தூசியோ, அழுக்கோ முதல் முறையாக படியும் போது அதை சுலபமாக அகற்றிவிடலாம். மீண்டும் மீண்டும் தூசியையும், அழுகையும் சேர விட்டுவிட்டோம் என்றால், அந்த பொருளில் இருந்து அழுக்கை அகற்றுவதற்கு மிகுந்த சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். இது போலத்தான் நம் உடலில் நாம் பல ஜென்மங்களாக அழுகை சேர விட்டுவிட்டோம். அவைகளை அகற்றுவது கொஞ்சம் சிரமமான காரியம்தான். இருந்தபோதும் அதை அகற்றியே தீரவேண்டும்.
💠 இன்றைய தற்சோதனை
💠 நம் உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய உயிர் மீது தூசி மற்றும் அழுக்கு நிறைய சேர்ந்துவிட்டது. இதனுடைய வெளிப்பாடாகத்தான் நாம் உடலில் நோயையும், மனதில் குழப்பத்தையும், வாழ்க்கையில் சிக்கல்களையும் சந்திக்கின்றோம். ஆரோக்கியமான நிறைவான வாழ்க்கைக்கு இந்த அழுக்குகளை அகற்ற கூடிய பணியில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த பணிக்கு பெயர்தான் உடற்பயிற்சி, காயகல்பம், தற்சோதனை, தவம் இவைகளை நாள் தவறாமல் செய்யும் போது இந்த அழுக்கு அகற்றப்படுகிறது.
💠 இன்றைய பண்புப்பயிற்சி
💠 அர்ப்பணிப்பு உணர்வோடு நாம் இந்த பணியில் நம்மை இணைத்துக் கொள்ளும் போது, ஒரே ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கவேண்டும். ஆன்மீக உயர்வுக்கு எப்போதும் அவசரம் என்பது ஆகவே ஆகாது. பொறுமையோடு உங்களுடைய கடமைகளை செய்து கொண்டே இருங்கள். செயலுக்குத் தக்க விளைவு, இறைநீதி நமக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதை கட்டாயமாக கொடுக்கும். ஆன்மீக வெற்றி, விடாமுயற்சி, பொறுமை இப்பண்பால் மட்டுமே அமைகிறது. வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
💠 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment