நித்தியக்கடன் மே 01 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 01


♾️🌌♾️🌌♾️🌌♾️🌌♾️🌌♾️


🕸️ இன்றைய நித்தியக்கடன்


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🕸️ இன்றைய சாதகம்


🕸️ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

🕸️ இன்றைய நற்சிந்தனை


🕸️ நீங்கள் படித்த, கேட்ட, பழகிய, நன்மை தரத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவைகளை மறந்து விடாதீர்கள். இவைகளை எல்லாம் மறந்து விட்டால் அதற்கும் உங்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகும். நல்ல பழக்கங்களுக்கும் உங்களுக்கும் எப்போது இடைவெளி அதிகரிக்கிறதோ, அப்போது அதற்கும் உங்களுக்குமான நட்பு அடியோடு தலைகிலாக மாறிவிடும். சரி எது முக்கியத்துவம் வாய்ந்தது? என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்...


🕸️ இன்றைய தற்சோதனை


🕸️ நம்முடைய உடல் நலத்திற்கு எது உகந்த உணவோ அது முக்கியத்துவம் வாய்ந்தது. நம்முடைய மனதிற்கு எது உகந்த சிந்தனையோ செயல்பாடோ அது முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் எதுவெல்லாம் நன்மையே தருமோ, அதுவெல்லாம் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவைகளை விட்டு பிரிந்து விடக்கூடாது. காலத்தின் சூழ்நிலைகள் நம்மை எப்படி வேண்டுமானாலும் மாற்றும். இந்த மாற்றங்களை கடந்து அவைகளோடு இணைந்தே இருக்க வேண்டும்.


🕸️ இன்றைய பண்புப்பயிற்சி


🕸️ இவ்வாறான சிந்தனையும் செயலும் நம்மிடையே பலமாக அமைத்துக்கொள்ள வேண்டும். நன்மைகளை விட்டு நாம் விலக விலக, தீமைகளுக்கு இறையாகி விடுவோம். அந்த தீமையும் சகஜமாக நம்மோடு பழகிவிடும். நமக்கும் அதற்கும் வேறுபாடு இல்லாத அளவுக்கு நம்மை முழுமையாக அவைகள் நம்மை கபளீகரம் செய்து விடும். அவைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதுதான் மனித வாழ்வாகும். நல்ல சிந்தனையோடும், செயல்களோடும் நம் வாழ்வை நாம் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

 

🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🕸️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments