நித்தியக்கடன் ஏப்ரல் 14 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 14


⭕♻️⭕♻️⭕♻️⭕♻️⭕♻️⭕


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔰 இன்றைய சாதகம்


🔰 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🔰 இன்றைய நற்சிந்தனை


🔰 உங்களைப் பற்றிய உண்மை உங்களுக்கு தெரியவரும்போது, இறைவனை பற்றிய உங்களுடைய பார்வை மாறுபடும், உயிரைப் பற்றிய உங்களுடைய பார்வை மாறுபடும், அறிவைப் பற்றிய உங்களுடைய பார்வை மாறுபடும், இயற்கையை பற்றிய உங்களுடைய பார்வை மாறுபடும், இவ்வுலகை பற்றிய உங்களுடைய பார்வை மாறுபடும், ஒவ்வொரு உண்மைகளைப் பற்றி நீங்கள் ஆழமாக புரிந்து கொள்ளும்போது, அதனை தொடர்ந்து அவைகள் சார்ந்த உங்களுடைய பார்வையும் முற்றிலுமாக மாறுபடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது...


🔰 இன்றைய தற்சோதனை


🔰 விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் மனிதர்களுடைய வாழ்க்கை ஊஞ்சல் ஆட்டம் போல் ஆகிவிட்டது. விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் தெளிவாக புரிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டும். அதுவரை இந்த போராட்டம் பல வடிவில் உரு மாறிக்கொண்டே தான் இருக்கும். தற்சோதனை செய்து உங்களை நீங்களே ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். இவைகளின் பல்வேறு முகங்களை உணர்ந்து கொள்ளுங்கள்.


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 பயிற்சிமுறை ஏதும் இல்லாமல் எந்த ஒரு மாற்றத்தையும், ஏற்றுக்கொள்ளவும் முடியாது, அவைகளை நடைமுறை வாழ்க்கையில் இணைக்கவும் முடியாது. சரியானதொரு உளப்பயிற்சி, உடற்பயிற்சி, உயிர் பயிற்சி என இவை அனைத்தின் வழியாகவும் உங்களை நீங்களே தயார்படுத்துங்கள். ஞான ஒளியை நோக்கிய இப்பயணம் இப்பிறவியிலேயே முழுமை பெறட்டும். அதற்கு தகுந்த திட்டங்களை ஆய்வு செய்து வகுத்துக் கொண்டு அதன் வழியே வாழ்ந்து காட்டுவோம். வாழ்க வளமுடன்...

 

🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔰 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments