வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 12
⛳🌀⛳🌀⛳🌀⛳🌀⛳🌀⛳
🔶 இன்றைய நித்தியக்கடன்
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 இன்றைய சாதகம்
🔶 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔶 இன்றைய நற்சிந்தனை
🔶 வாழ்க்கை என்பது ஒரு புள்ளி அல்ல பல புள்ளிகள் ஒன்று சேர்ந்தது. நேர்கோடுகளையும் வளைவு கோடுகளையும், பயன்படுத்தி புள்ளிகளை ஒன்றிணைக்கும் போது ஒரு முழு கோலமாக உருவாதே வாழ்கையாகும். ஒரு புள்ளியில் துவங்கி வாழ்க்கை பல புள்ளிகளோடு இணைக்கப் படுகிறது. ஒரு புள்ளி மட்டுமே வாழ்க்கை அல்ல, எல்லா புள்ளிகளும் ஒன்று சேர்வது தான் வாழ்க்கை. ஆனால் இது ஒரு புள்ளியில் தான் துவங்குகிறது. இந்த வாழ்க்கையின் துவக்கத்தையும், முடிவையும் கண்டறிவதற்கு தான் இந்த மனிதப்பிறவி...
🔶 இன்றைய தற்சோதனை
🔶 ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வில் நடக்கின்ற நிகழ்ச்சிக்கும் உலக அரசியலுக்கும், நேரடியாகவும் மறைமுகமாகவும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தொலைநோக்கு பார்வையோடும் சிந்தனையோடும், உங்களை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை உலக அரசியலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கை எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும். புலன் சார்ந்த வாழ்க்கையில் இருந்து தயவு செய்து வெளியில் வாருங்கள். அறிவு சார்ந்த வாழ்க்கைக்கு மாறுங்கள். உங்களுடைய பலகீனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் களவாடி கொண்டிருக்கிறார்கள்.
🔶 இன்றைய பண்புப்பயிற்சி
🔶 உங்களின் வாழ்க்கை பயணம் என்பது சூழ்நிலையும் மனதையும் சார்ந்தது. இந்த இடத்தில் நான் ஏன் நிற்கிறேன்? இந்த திருப்பம் ஏன் உருவானது? என்றெல்லாம் ஆய்வு செய்து பாருங்கள். சின்னச்சின்ன நிகழ்ச்சிகளுக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய உண்மை புதைந்திருப்பதை தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். கண் போன போக்கிலே கால் போகலாமா..! கால் போன போக்கிலே மனம் போகலாமா..! மனிதன் போன பாதையை மறந்து போகலாமா! கடவுள் பாதி மிருகம் பாதி இடைப்பட்ட நிலையில் நாங்களும், நானும். வாழ்க வளமுடன்...
🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🔶 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment