நித்தியக்கடன் ஏப்ரல் 11 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 11


💢🎱💢🎱💢🎱💢🎱💢🎱💢


🌏 இன்றைய நித்தியக்கடன்


🌏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌏 இன்றைய சாதகம்


🌏 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

 

🌏 இன்றைய நற்சிந்தனை


🌏 மனதை உயிர்மீது சிறுக, சிறுக இணைத்து பழகிப் பழகி மனோ வலிமையை கூட்டிக் கொள்ளுங்கள். மனம் வலிமையோடு இருக்கும் போதுதான் அந்த மனோபலத்தை கொண்டு நமக்குள்ளாக இருக்கக்கூடிய விலங்குகளுடைய தன்மையை மாற்றி அமைக்க முடியும். மேலும் நம்முடைய பழக்கங்களை, விளக்கங்களை நோக்கி திருப்பவும் முடியும். மனசீரமைப்பிற்கு  பின்னால்தான் இந்த பிரபஞ்ச உண்மையை மனதால் உணர முடியும்.


🌏 இன்றைய தற்சோதனை


🌏 சிறுதுளியே பெருவெள்ளம் என்ற வார்த்தைக்கும், பொருளுக்கும் ஏற்ப எண்ணங்களை சிறுக சிறுக சீர்திருத்தங்கள் சின்ன, சின்ன நிகழ்ச்சிகளிலிருந்து நேர் நிரை உணர்வாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் சிறப்பாக வாழ்க்கையை வாழ முடியும். இதற்கு தற்சோதனையை உதவியாகக் கொண்டு இதில் வெற்றி காணுங்கள். உங்களுடைய நியாயமான தேடுதல்கள் இனிமேல்தான் துவங்கப் போகிறது.


🌏 இன்றைய பண்புப் பயிற்சி


🌏 "மறப்பதை மறந்து விடுவோம் மறக்காமல் இருக்க வேண்டியதை எப்போதும் நினைவில் கொள்வோம்" இந்த பண்பில் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். இந்த பண்புக்கு பின்னால் உங்களுடைய துன்பங்கள் உடல் நோய்கள் அனைத்தும் காலத்திற்கு காலம் குறைந்து கொண்டே வரும். இந்தப் பண்பே இறைநிலையோடு நம்மை முழுமையாக இணைக்கும் பண்பாகும். வாழ்க வளமுடன்...

 

🌏 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌏 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌏 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments