வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 09
🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶
🌸 இன்றைய நித்தியக்கடன்
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌸 இன்றைய சாதகம்
🌸 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌸 இன்றைய நற்சிந்தனை
🌸 எல்லா வகையான சூழ்நிலைகளையும் கொண்டதுதான் மனிதனுடைய வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கை ஒரேமாதிரியாக எப்போதும், எக்காலத்திலும் இருந்து விடப் போவது கிடையாது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக வரும். இவைகளை எதிர்கொள்ளக்கூடிய திறமையை வளர்த்துக் கொள்வதுதான் மனிதர்களுடைய சிறப்பு அம்சமாகும்.
🌸 இன்றைய தற்சோதனை
🌸 உங்களுடைய வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். மற்றவர்களுடைய வாழ்க்கையிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். நமக்கு இந்த சூழ்நிலை மாற்றம் எதனால் ஏற்படுகிறது, என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அதனுடைய அகக்காரணி எதுவோ அந்த காரணியை ஒழுங்கு செய்து விட்டால் புறத்தில் எந்த ஒரு பாதிப்பும் பெரிதாக ஏற்படாது. தற்சோதனை செய்து அந்த அகக்காரணியை கண்டறிந்து ஒழுங்கு செய்யுங்கள்.
🌸 இன்றைய பண்புப் பயிற்சி
🌸 மனதை மனதின் மீது லயப்படுத்தி உயிரின் மீது அமரச் செய்தால் தான், அகக்காரணியை கண்டு உணர முடியும். இதற்கு பலமான முயற்சி தேவை உங்களுடைய எல்லா முயற்சிகளும் வினை தன்மையை அடிப்படையாக கொண்டதே ஆகும். சோர்வு ஏற்பட்டாலும் சோர்ந்து விடாமல் விடாமுயற்சியோடு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மனதை உயிரின் மீது நிலைக்கச் செய்யுங்கள். இந்த பண்பில் நீங்கள் வெற்றி காணக் காண இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் அனைத்தும் உங்களுக்கு உள்ளுணர்வாக கிட்டும். வாழ்க வளமுடன்...
🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌸 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment