நித்தியக்கடன் ஏப்ரல் 07 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 07


🚥🏮🚥🏮🚥🏮🚥🏮🚥🏮🚥


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌀 இன்றைய சாதகம்


🌀 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🌀 இன்றைய நற்சிந்தனை


🌀 வாழ்வதற்கான வாய்ப்பை இயற்கை எனும் பேராற்றல் எல்லாவிதமான மனிதர்களுக்கும், ஒரே மாதிரியாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. சில மனிதர்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதற்குரிய சரியான விளைவை அவர்கள் எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக அனுபவிக்கத்தான் போகிறார்கள். நாம் இவ்வுலகிற்கு அன்பையும் கருணையையும் பகிர்ந்து கொள்வதற்காகவே வந்துள்ளோம், என்ற அடிப்படை உண்மையை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு அதன் வழியில் செயல்படுவோம்.


🌀 இன்றைய தற்சோதனை


🌀 நம் வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஆதாரங்களை சேகரியுங்கள். ஆதாரங்களின் அடிப்படையில் தான் நாளைய திட்டங்களை உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். உயர்ந்த லட்சியங்களோடு நாம் இந்த பூமியில் உருவாக்கப்பட்டு இருக்கிறோம். அந்த உயர்ந்த லட்சியத்திற்காக நாம் வாழ்க்கையில் பல நல்ல செயல்களை செய்து, அதன் விளைவை, அடையாளத்தை நாளைய சமுதாயத்திற்கு தர வேண்டும்.


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 நல்ல புரிதல்களை ஒருவர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமேயானால் அவருக்கு சில பல பண்புகள் தேவை. அந்த பண்புகளின் அடிப்படையில் தான் உண்மையான புரிதல் ஒரு மனிதனுக்குள் மலரும். அந்த மலர்ச்சிக்கு பெயர் தான் அறிஞர்கள், ஞானிகள். நாம் நம்முடைய நிஜமான வாழ்க்கையை அடையாளம் கண்டு கொண்டு, அந்த அடையாளமாக நம்முடைய சமுதாயத்திற்கும் சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டுவோம். வாழ்க வளமுடன்...

 

🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments