வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 06
🌸🎲🌸🎲🌸🎲🌸🎲🌸🎲🌸
🔘 இன்றைய நித்தியக்கடன்
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔘 இன்றைய சாதகம்
🔘 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🔘 இன்றைய நற்சிந்தனை
🔘 செயலுக்குத் தக்க விளைவு என்பது எப்போதும், எங்கேயும் ஒரே மாதிரியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு விளைவுக்கு பல்வேறு காரணங்கள் ஒன்று சேர்ந்து அமைகின்றன. தொடர்பு கொள்ளும் பொருள், இடம், காலம், நோக்கம், திறமை இதற்கு தக்கவாறு விளைவுகள் வேறு படும், மாறுபடும் ஒரே செயலாக இருந்தாலும். இந்த ஐவகை காரணங்களால் விளைவு ஒரேமாதிரியாக அமைவதற்கு வாய்ப்பு கிடையாது.
🔘 இன்றைய தற்சோதனை
🔘 நோக்கம் சரியாக இருந்தாலும் செயல்படும் போது விளைவு மாறும். அதே செயலை செய்யும் காலம் மாறும் போதும் விளைவு மற்றும் நபர்கள் வேறுபடும் போது விளைவுகள் மாறும். ஒரே செயலை திறமையோடு ஒருவர் செய்யும் போது விளைவு மாறுபடும். அதே செயல் திறமை இல்லாமல் செய்யப்படும் போது மாறுபடும். அதே நபர் அதே திறமையோடு செயல்பட்டாலும் காலம் மாறும் போது விளைவு மாறும். தொடர்பு கொள்ளக்கூடிய பொருள் அதனுடைய தன்மைக்குத் தக்கவாறு விளைவு மாறுபடும். இந்த ஐந்து வகையான காரணங்களால் விளைவுகள் மாறுவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த ஐந்து வகையான காரணங்களை தற்சோதனை செய்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
🔘 இன்றைய பண்புப் பயிற்சி
🔘 எல்லாவற்றையும் எப்போதும் சிந்தித்து, ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சி இல்லாத எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையையும், அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. சிந்தனை செய்ய வேண்டும் ஏன்? எதற்கு? எதனால்? எப்படி? என்று கட்டாயம் அதனுடைய காரணத்தை நாம் உணர்ந்திருக்க வேண்டும். இந்த நிலையில் நம்முடைய சிந்தனைகளை செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளும்போது. எதிர்காலத்தில் எந்த விதமான சிக்கல்களும், இன்னல்களும், எழாமல் தெளிவோடு இருப்போம். இந்த ஆராய்ச்சி பண்பு நம்மை பல்வேறு வகையில் உயர்த்தும் சிறப்புமிக்கது. வாழ்க வளமுடன்..!
🔘 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔘 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🔘 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment