வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 04
💢🍥💢🍥💢🍥💢🍥💢🍥💢
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ நம்முடைய இந்திய தேசத்தின் நிலப்பரப்பு பகுதியில் வெயில், மழை, பணி, காற்று என்று நான்கு விதமான பருவகாலங்கள் முறையாக அமைந்திருக்கிறது. நம்முடைய உடல் செல்களுக்குள் இந்த பருவ காலங்களை ஏற்று, அதற்கு தக்கவாறு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளக் கூடிய திறமையும், ஆற்றலும் ஒவ்வொரு உடல் செல்களுக்கும் இயல்பாகவே இருக்கிறது. அதாவது வெயில் அதிகமாக இருக்கும் காலத்தில், அதை தாங்கும் சக்தியை நம் உடல் செல்கள் வளர்த்துக் கொள்ளும். இதற்கு பெயர் தகவமைப்பு கோட்பாடு...
⛳ இன்றைய தற்சோதனை
⛳ இதுபோன்றதொரு திறமையும், ஆற்றலும் நம் உடல் செல்களுக்கு இயல்பாகவே இருக்கும்போது, நாம் நம் வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடிய நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய திறமை நம்மிடம் இல்லாமல் போய்விட்டதா? என்றால் அது உண்மையில் அவ்வாறு இல்லை. நம்முடைய எண்ணம் இந்த இயற்கை ஆற்றலை திசை மாற்றி, முறையை மாற்றி, பலதரப்பட்ட நிலைபாடுகளில் புலன் இன்பங்களில் சிக்கிக் கொண்டுவிட்டது. இயற்கையில் நமக்கு எல்லாமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது, என்ற உண்மை தெரியாமல் நாம் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறோம்.
⛳ இன்றைய பண்புப்பயிற்சி
⛳ நோய் எதிர்ப்பு சக்தியானாலும், சமுதாய சிக்கலானாலும், வாழ்க்கை இடர்ப்பாடுகளானாலும் நாம் அவைகளை சரியாக எதிர்கொள்ளக்கூடிய, அறிவையும் திறமையையும் நாம் வளர்ந்த முறையில் இழந்துவிட்டோம். ஆக அவைகளையெல்லாம் மீட்டெடுக்க மனப் பயிற்சி, உடற்பயிற்சி, உயிர் பயிற்சி தேவை. இந்த தேவைகளில் முறையாக உயர்வோம் நமக்கான வாழ்வை வாழ்வோம் வாழ்க வளமுடன்...
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
⛳ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment