வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 02
💠🔘💠🔘💠🔘💠🔘💠🔘💠
☘️ இன்றைய நித்தியக்கடன்
☘️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
☘️ இன்றைய சாதகம்
☘️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
☘️ இன்றைய நற்சிந்தனை
☘️ ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதுகோல் கொண்டு எழுதும்போதுதான் ஒரு வாக்கியமோ, கதையோ, கட்டுரையோ, கவிதையோ கிடைக்கிறது. அதுவும் சரியான எழுத்து கோர்வையாக இருக்கும் போதுதான் அந்த வாக்கியம் சரியான பொருளைத்தரும். அதனுடைய பொருள் படிக்கும் போது மற்றவர்களுக்கு தெளிவாகப் புரியும். எழுத்துக்கள் இடம் மாறி அமைந்திருந்தாலோ அல்லது எழுத்து புரியாத நிலையில் இருந்தாலோ அதனுடைய பொருள் எவருக்கும் புரியாமல் போகும்.
☘️ இன்றைய தற்சோதனை
☘️ நம்முடைய எண்ணம் தான் எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை சரியான கோர்வையில் சேர்த்தால் தான் பொருளிளுள்ள வாக்கியம் கிடைக்கும். எழுத்துக்கோர்வை பிழையாக இருந்தால் அந்த வாக்கியமும் பிழையாகவே அமையும். வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமானால் எண்ணங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும். எண்ணத்தை பயன்படுத்தும் போது புரிதல் வேண்டும். தாறுமாறாக பிழையான எண்ணங்களை பயன்படுத்தினால் வாழ்க்கை பிழையாகிவிடும். தற்சோதனை செய்து எண்ணங்களை ஓழுங்கமைப் போம் இந்த உண்மையில் நாம் வாழ்ந்து பிறரும் வாழ்வதற்கு உதவுவோம்.
☘️ இன்றைய பண்புப் பயிற்சி
☘️ விளைவை சிந்தித்து உணர்ந்து செயலாற்றும் பண்பில் உயர்வு காண்போம். விளைவு என்னவென்று புரியாமல் செயல்களைச் செய்துவிட்டு பின் எதிர்காலத்தில் துன்பப்படுவதாலோ, துன்பத்தை எண்ணி வருந்துவதாலோ எந்த ஒரு பயனும் கிடையாது. விளைவை உணர்ந்து விழிப்பு நிலையில் வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
☘️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
☘️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
☘️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment