நித்தியக்கடன் மார்ச் 31 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 31


☄️🎱☄️🎱☄️🎱☄️🎱☄️🎱☄️


🌏 இன்றைய நித்தியக்கடன்


🌏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌏 இன்றைய சாதகம்


🌏 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🌏 இன்றைய நற்சிந்தனை


🌏 உலக அரசியல், உலக பொருளாதாரம், உலக வர்த்தகம், உலக மருத்துவம், உலக சுகாதாரம், உலக மக்களின் வாழ்வாதாரம் இவை அனைத்திலும் ஏற்படக்கூடிய இன்றைய சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும், இடர்பாடுகளும் இயற்கை கோட்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாமல் மனப் பயிற்சி இல்லாமல் வாழும் மனித மனதில் எழும் பேராசையின் பக்க விளைவுகளே, இந்த அனைத்து துன்பங்களுக்கும் ஒரே ஒரு காரணம். பல்வேறு துறையை சார்ந்தவர்களின் முறைபடுத்தப்படாத மனதிலிருந்து எழக்கூடிய எண்ணங்களும் உணர்ச்சிகளும், பக்கத்து மனிதனையும், அயல்நாட்டு வர்த்தகத்தையும், அனைத்து உலக மக்களின் சுதந்திர வாழ்வாதாரத்தையும் நிலைகுலையச் செய்து விடுகிறது...


🌏 இன்றைய தற்சோதனை


🌏 தெரிந்தோ, தெரியாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொரு மனிதனுடைய செயல்களும் சிந்தனைகளும் பிறரை நன்மையாகவோ தீமையாகவோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். நல்ல சிந்தனையுள்ள மனிதனாக நாம் இருந்தால், நம்முடைய எண்ணம், சொல், செயல், இதன் வழியாக தானும் தன்னை சார்ந்தவர்களும் அமைதியாக வாழ்வதற்குரிய செயலை மட்டுமே செய்ய வேண்டும்.


🌏 இன்றைய பண்புப்பயிற்சி


🌏 பிறர் என்ற இடத்தில் நம்முடைய குழந்தைகள், நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் இருக்கிறார்கள். பிறருக்காக என்றால் எங்கேயோ இருப்பவர்கள் அல்ல. எந்த ஒன்றையும் தொலைநோக்கோடு புரிந்து கொள்ள வேண்டும். நாளைய நல்ல விளைவுகளாக இன்றைய நல்ல செயல்களை விதைக்க வேண்டும். எல்லோருமே இதற்காக சில தியாகம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை என்ற பண்புகளை எல்லோரும் வளர்த்துக் கொள்ள தான் வேண்டும். வாழ்க வளமுடன்...

 

🌏 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌏 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌏 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments