வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 29
♨️🍥♨️🍥♨️🍥♨️🍥♨️🍥♨️
❄️ இன்றைய நித்தியக்கடன்
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ இன்றைய சாதகம்
❄️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
❄️ இன்றைய நற்சிந்தனை
❄️ ஒரு மரம் மேல்பரப்பில் எந்த அளவுக்கு கிளைகளோடு இருக்கிறதோ, அதே அளவுக்கு அதனுடைய அடிப்பகுதியில் வேர்கள் விரிந்து, பரந்து இருக்கும். இதுபோலத்தான் மனிதர்களுடைய எண்ணம் எந்த அளவுக்கு பரந்து, விரிந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்களுடைய கருமையத்தின் தன்மை இந்த பிரபஞ்சத்தில் விரிந்து, பரந்து இருக்கும். இந்த விரிந்து பரந்த மனோநிலை, உயிர்நிலை என்பது இயற்கையில் விஞ்ஞானமாகும். இந்த விஞ்ஞான வளர்ச்சி சரியான செயல்களாலும் சரியான சிந்தனையாலும் அமைகிறது.
❄️ இன்றைய தற்சோதனை
❄️ தியான பயிற்சியும், தற்சோதனை பயிற்சியும் இந்த மன விரிவாக்கத்தையும், உயிரின் விரிவாக்கத்தையும் நமக்கு உருவாக்கித் தரும் ஒரு அற்புதமான விஞ்ஞானமாகும். இந்த விஞ்ஞானத்தை அனைவரும் திட்டமிட்டுக் கொண்டு சீரோடும், சிறப்போடும் வளர்த்துக் கொள்ள முடியும்.
❄️ இன்றைய பண்புப் பயிற்சி
❄️ பிரபஞ்சம் முழுவதையும் எது ஒழுங்காக இயக்குகிறதோ அதுவே தான் நமக்குள் மனமாகவும், அறிவாகவும் இருந்து செயல்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய உண்மைகளை நம் அறிவின் மூலமாக உணர்ந்து கொள்ள முடியும். அறிவும், ஆற்றலும் ஒன்றுதான். இந்த உண்மையை உளமாற ஏற்று திடமாக செயல் புரிந்து வாழ்வோம். திடம்பட செயல் புரியும் பண்பில் வளமாக உயர்வோம்.
❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
❄️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment