வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 24
🍁❄️🍁❄️🍁❄️🍁❄️🍁❄️🍁
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ தான் தனது என்பது சுயநல சிந்தனையோடு எல்லா சூழ்நிலைகளிலும் தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொண்டு, அறியாமை இருளுக்குள் மூழ்கிக் கிடக்கும் ஒரு விதமான மனபோதை, மயக்கமான மனோநிலை, தனக்கு கிடைத்த பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் அனைத்தையும் அளவுக்கு மீறி சுயநலமாக சிந்திப்பதும் செயல் புரிவதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையின் உச்சகட்டம். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களோடு இயல்பான அன்போடும் கருணையோடும் இருக்க முடியவில்லை என்றால், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நாம் ஒரு மனநோயாளியாக மாறி விட்டோம். இப்படி மாற்றியது இயந்திரத்தனமான நம் வாழ்க்கை முறை. இந்த மனப்பழுதுகளை எல்லாம் நீக்கிக் கொள்ள வேண்டும்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ அளவுக்கு மீறி பொருளீட்டுதல், அளவுக்கு மீறி புலன் இன்பங்களில் ஈடுபடுதல், அளவுக்கு மீறி விஞ்ஞான கருவிகளை பயன்படுத்துதல், அளவுக்கு மீறி உறங்குதல், உறங்காமலிருத்தல், அளவுக்குமீறி உணவு உண்ணுதல், ஐந்தில் அளவு முறை மீறுதலும் உணர்ச்சிவயப்பட்ட மனோநிலையாகும். இவை யாவும் பிறர் வாழும் சுதந்திரத்தை பழித்தலும், பிறர் வாழ்வாதாரத்தை சீரழித்தலும், பிறர் பொருளை அவர்களுக்கு போய் சேர விடாமல் இடைமறித்து தனதாக்கிக் கொள்ளுதல் என்ற கலவாடுதலுக்கு சமமாகும். உணர்ச்சிவயப்பட்ட நிலையின் பக்கவிளைவுகளை தற்சோதனை செய்து இவைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ தொழில் கல்வி, இயற்கை தத்துவ கல்வி, ஒழுக்க பழக்க கல்வி இவை மனித அறிவில் நிரம்பிய ஒரு வாழ்க்கை முறையை, வாழத் தொடங்கிய நாள் முதற்கொண்டு தேவைகள் குறையும். விஞ்ஞானம் மனித சமுதாயத்துக்கு நன்மை மட்டும் செய்யும். அரசியலை தன்னுடைய சுய லாபத்திற்காக எவரொருவரும் பயன்படுத்த மாட்டார்கள். சுகாதாரமும் அமைதியும் நிறைந்த பூமியக மாற்றி இருக்கும். பொருளாதாரம் எல்லாவகையிலும் மனிதர்களுக்கு நிறைவானதாகவும் நம்பிக்கையும் பாதுகாப்பும் கொடுக்கும். இத்தகைய வாழ்க்கையை இன்று வாழத் துவங்குவோம். நாளைய நம்முடைய சந்ததிகளுக்கும், சமுதாயத்திற்கும் பாலமாய் அமைவோம்... வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment