வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 23
♨️🌿♨️🌿♨️🌿♨️🌿♨️🌿♨️
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 நாம் வாழும் முறையானது மற்றவர்களுடைய உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் இருக்கக்கூடாது. மாற்றவர்களுடைய உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்க வேண்டும். உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அளவுமுறை மீறி புலன்வயப்பட்ட செயல்கள் அனைத்தும் உணர்ச்சியாகும். அளவுமுறை மீறாமல் வாழும் முறையே அறிவுபூர்வமான உணர்வு நிலையாகும். அறிவு என்பது பொதுவானது, அதற்கு உணர்ச்சி, உணர்வு எதுவுமே கிடையாது. அதனை சரியான முறையில் பக்குவமான மனோ நிலையில் நாம்தான் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ள வேண்டும்...
🚥 இன்றைய தற்சோதனை
🚥 நம்முடைய எல்லாவகையான செயலும் இவ்வுலகில் மற்றவர்களை, ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தான் போகிறது பாதிப்பு ஏற்படாமல் எந்த ஒரு எண்ணமும் சொல்லும் செயலும் அமையவே முடியாது. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே இயற்கைக்கு ஒத்த முறையில் நம்முடைய வாழ்க்கை முறையை, தேவைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நம் உடல் மீதும், உயிர் மீதும், மனம் மீதும், குடும்பத்தின் மீதும், சமுதாயத்தின் மீதும் அக்கறையோடு வாழ்ந்தால் அதுவே போதுமானது. மற்றவர்களுக்கு நம்மால் எந்த வகையிலும் துன்பம் இருக்காது, நாமும் நம்மை துன்பப்படுத்தி கொள்ள மாட்டோம்.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 என்னுடைய தேவைகளை ஆசைகளை நான் எதற்காக குறைத்துக் கொள்ள வேண்டும்?. நான் என் மனம் போல வாழ கூடாதா? என்றால் வாழலாம். ஆனால் அதில் பெரும்பாலும் நோய் தொந்தரவுகளும், மனக் குழப்பங்களும், வாழ்க்கை சிக்கல்களும் உருவாகிக் கொண்டே இருக்கும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அந்த வாழ்க்கை பொழுதுபோக்காகவும் கேளிக்கை கூத்தாகவும் தான் இருக்குமே தவிர, அது அறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறையாக இருப்பதற்கு அணுவளவு கூட வாய்ப்பே இல்லை. அறிவில் உயர்வோம்! ஆளுமையோடு வாழ்வோம்! நாமும் நம் குடும்பமும்... வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🚥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment