நித்தியக்கடன் மார்ச் 22 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 22


♦️🌸♦️🌸♦️🌸♦️🌸♦️🌸♦️


🔘 இன்றைய நித்தியக்கடன்


🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔘 இன்றைய சாதகம்


🔘 புதன்கிழமை 

காலை:- ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.

 

🔘 இன்றைய நற்சிந்தனை


🔘 மனம் எதன் பின்னாவது சென்று கொண்டேதான் இருக்கும். இந்த எண்ண ஓட்டம் என்பது இறப்பு வரை இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த மனதையும், எண்ணங்களையும் பற்றி நாம் தெளிவாக புரிந்து கொண்டால் மட்டும்தான், இவைகளை முறைப்படுத்தி சரியாக நாம் அறிவின் கீழ் கொண்டுவந்து அமைக்க முடியும். இது ஒரு நுட்பமான காரியம் இந்த நுட்பமான காரியத்தை சுலபமாக செய்து விடலாம்.  வேதாத்திரி மகரிஷி கொடுத்த பயிற்சிகள் அனைத்தையும் சரியான முறையிலும், அளவிலும் பின்பற்றி இதனை சாதிக்க முடியும்.


🔘 இன்றைய தற்சோதனை


🔘 மனதிற்கும், எண்ணத்திற்கும் வேறுபாடு உண்டு. எண்ணங்களுடைய மொத்தத் தொகுப்பை நாம் மனம் என்கிறோம். தனித்தனியான நினைவுகள் நடந்தவற்றை எண்ணிப் பார்க்கும்போது, அது எண்ணம் எனப்படுகிறது. தற்சோதனை செய்து எண்ணங்களையும், அதனுடைய வகைகளையும் பிரித்து, பகுத்து உணர்ந்து கொள்ளுங்கள். தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத் தூண்டுதல், கருவமைப்பு, தெய்வீகம் என்ற ஆறு வகைகளில் எண்ணம் நமக்கு எழுகிறது. இதை தற்சோதனை செய்து சீரமைத்துக் கொன்டு சிறப்பாய் வாழ்வோம்.


🔘 இன்றைய பண்புப் பயிற்சி


🔘 மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அமைதிக்குப் பின்னால் நம் மனதிற்கு சக்தி உருவாகும் அந்த சக்திக்கு பெயர் மனோசக்தி, மனோதிடம். இந்த மனோசக்தியின் வழியாகத்தான் தன் நிலையை உணர்வதற்குண்டான வாய்ப்புகளும், திறனும் மேம்படும். அமைதியோடு இருக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்...

 

🔘 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔘 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔘 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments