வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 18
🍁💦🍁💦🍁💦🍁💦🍁💦🍁
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 ஒவ்வொரு மனிதர்களுடைய கருமையத்திலும் எவ்வளவு களங்கம் இருக்கிறது, என்பதை நாம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்த பூமியில் காற்று, நீர், நிலம் இவற்றில் எந்த அளவு மாசு நிறைந்திருக்கிறதோ, அந்த அளவு மனிதருடைய கருமையமும் களங்கப்பட்டு இருக்கும். மனிதர்களுக்குள் என்ன இருக்கிறதோ, அதுவே அவர்களின் எண்ணம், சொல், செயல் வழியாக வெளிப்படு இந்த பூமியை மாசுபடுத்தி கருதுகிறது. இந்த ஒட்டுமொத்த மனித சமுதாயம் அவர்களுக்குள் இருந்த களங்கம் இவை எல்லாம் வெளிப்பட்டு இவ்வுலகை மாசு நிறைந்ததாக மாற்றிவிட்டது. கருமையம் தூய்மை பெறப் பெற இப்பூமியும் தூய்மை பெறும்.
🍥 இன்றைய தற்சோதனை
🍥 எல்லோருக்கும் பொதுவான இந்த பூமியின் வளங்களை மனிதன் தனக்கு மட்டும் என்று எண்ணி, செயல்களை செய்ய துவங்கிய நாள் முதல் கொண்டு இந்த மாசு உருவானது. கருமையமும் களங்கமானது. தனி மனிதர் எவரையும் இனி எவராலும் காப்பாற்ற முடியாது. அவரவர்களை அவர்களே காப்பாற்றி கொள்ள வேண்டியது தான், இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக நிகழ்ச்சிகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையாக இருக்கிறது. இயற்கையின் பொறுமையை சோதிக்க துவங்கிவிட்டார்கள். மனிதர்கள் இதனுடைய முடிவு இனிமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னை தற்காத்துக் கொள்ள கூடிய பொறுப்பும் கடமையும் மிக அதிகம்.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 எல்லோருக்கும் பொதுவாகவும், எல்லா உயிர்களினுடைய நன்மையிலும் அக்கறை கொண்டவராகவும், வாழவேண்டிய மனிதர்கள் தன்னுடைய சுயநல சிந்தனையை அறவே கைவிட்டு விட வேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இனி இந்த பூமியில் இருக்க முடியாது. பொறுப்பை உணர்ந்து கடமையை அறிந்து தானும், தன்னை சார்ந்தவர்களையும், பூமியையும் பாதுகாத்து வாழ்வதே மனித பிறவியினுடைய, அடிப்படை நோக்கம் என்பதை அனைத்து உலக மக்களும் உணர்வந்து. இதற்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் மனவளக்கலை பயிற்சிகளை நாள் தவறாமல் செய்து நாமும் நம் குடும்பமும் நிறைவாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🍥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment