வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 17
🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶
🕸️ இன்றைய நித்தியக்கடன்
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕸️ இன்றைய சாதகம்
🕸️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🕸️ இன்றைய நற்சிந்தனை
🕸️ எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், பொருள்துறை அருள்துறை இரண்டிலும் அவர்கள் நிறைவாக இருக்க வேண்டும். எவரொருவர் தன்னுடைய வாழ்க்கை சூழ்நிலையில் மற்றவர்களை வைத்து சிந்தித்து பார்க்கிறாறோ, மற்றவருடைய வாழ்க்கை சூழ்நிலையில் தன்னை வைத்து சிந்தித்து பார்க்கிறாறோ, அவரால்தான் பொருள் துறையிலும் அருள் துறையிலும் உண்மையான வெற்றி பெறமுடியும். மேலும் இவற்றில் முன்னேற்றம் காணும்போது உடல், உயிர், மனம், அறிவு என்று எல்லா நிலைகளிலும் இதனை நாம் பொருத்திப் பார்க்கும் மனோ பக்குவம் அமைந்துவிடும்...
🕸️ இன்றைய தற்சோதனை
🕸️ பிறர் துன்பத்தை தன் துன்பமாகவும், தன்னுடைய மகிழ்ச்சியை பிறர் மகிழ்ச்சியாகவும் பாவிக்கும் மனோபாவம் எப்போது உருவாகிறதோ, அப்போது அவர் அருள் துறையில் ஞானத்திற்கு தகுதி உடையவராக உருவாகிறார். பல்வேறு பாவனையோடு அலைந்து திரிந்த மனதை, உயிரில் உண்மையான பாவனைக்கு உயர்த்தி அதில் நிலைபெறச் செய்ய வேண்டும். மனதை டெல்டா நிலைக்கு சும்மா இருக்க செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
🕸️ இன்றைய பண்புப்பயிற்சி
🕸️ தற்போது உள்ள காலகட்டத்தில் நம்முடைய கருவமைப்பு தன்மையில், இன்னும் பல தரப்பட்ட தன்மாற்றங்கள் நடைபெற வேண்டி உள்ளது. அவைகளெல்லாம் உருவாகி மூளை செல்களுக்குள் நிலை பெற்று வரும்போதுதான் மனம் சும்மாயிருக்க ஆயத்தமாகும். ஆக இப்போதைக்கு அதற்கான முயற்சிகள் செய்து பழகலாம் சித்தி ஆகாது. நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பயணிப்போம்... பயன்பெறுவோம்... பயன்பெற செய்வோம்... வாழ்க வளமுடன்...
🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🕸️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment