வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 16
♦️🌾♦️🌾♦️🌾♦️🌾♦️🌾♦️
🌸 இன்றைய நித்தியக்கடன்
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌸 இன்றைய சாதகம்
🌸 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌸 இன்றைய நற்சிந்தனை
🌸 சுத்தவெளி தனக்குள் அனைத்தையும் உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. சுத்தவெளிக்குள் உள்ளடக்கமாக வைத்திருந்த அனைத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது காந்தம். சுத்தவெளி அனைத்தும் உள்ளடக்கிய நிலை, காந்தமோ உள்ளடங்கி உள்ள அனைத்தையும் வெளிப்படுத்தும் நிலை. இந்த சிறப்புமிக்க காந்தமே மனிதனுக்குள் மனமாக இயங்குகிறது.
🌸 இன்றைய தற்சோதனை
🌸 மனதின் மீது படிந்திருக்கக்கூடிய கசடு, துரு, களங்கம் இவைகளை நீக்கிவிட்டால் மனதிற்குள்ளிருந்து எழும் ஒளி அலை இந்த பிரபஞ்சத்தோடு இணைந்து இயங்கக்கூடிய அளவுக்கு ஆற்றலும், வலிமையும் உடையது. மனதை தற்சோதனைக்குள் எவ்வளவு ஆழமாக இணைத்துக் கொள்கிறோம். அவ்வளவு வலிமையும், ஆற்றலும் மனதிற்கு உருவாகும். மனதைத்தூய்மை செய்ய தற்சோதனையினால் மட்டுமே அமையும்.
🌸 இன்றைய பண்புப் பயிற்சி
🌸 அளவுமுறை மீறிய எண்ணம், சொல், செயல் எதார்த்தத்தை கடந்த கற்பனை, எதிர்பார்ப்புகள் இதுதான் மனதுக்குள் அடங்கி இருக்கக்கூடிய சக்தியை தடுக்கிறது, திசை மாற்றுகிறது. இவைகளை முறைபடுத்திக் கொண்டால் போதும். பண்பான எண்ணம், சொல், செயல் இவ்வாறு முறையாக நம்மை மேம்படுத்திக் கொள்ளும் போது இயல்பாகவே மனதின் சக்தி வெளிப்படத் துவங்கிவிடும், மனம் ஒளிரத் துவங்கிவிடும்.
🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌸 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment