வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 13
💫👣💫👣💫👣💫👣💫👣💫
🌿 இன்றைய நித்தியக்கடன்
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌿 இன்றைய சாதகம்
🌿 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🌿 இன்றைய நற்சிந்தனை
🌿 இந்த மனிதப் பிறவியினுடைய நோக்கம் விலங்கின பதிவுகளை நீக்கிக்கொண்டு, ஆறாவது அறிவில் முழுமை பெறுவதே ஆகும். நமது வாழ்வின் நோக்கம் விலங்கின பதிவுகளை நீக்கி கொள்வதிலும், ஆறாவது அறிவில் முழுமை பெறத்தக்க செயல்களை செய்வதே வாழ்வின் நோக்கம் ஆகும். இதிலிருந்து சிறிதளவு கூட விலகிவிடாமல் வாழ்க்கையை திட்டமிட்டு வாழ வேண்டும்.
🌿 இன்றைய தற்சோதனை
🌿 எல்லா வகையான செயலுக்கும் விளைவு கட்டாயம் உண்டு. இந்த செயல் விளைவு நீதி ஒருநாளும், ஒருபோதும் யாருக்காகவும் மாறப்போவது இல்லை. ஞானம் சார்ந்த செயல்களை செய்யும்போது ஞானம் வளர்கிறது. ஞான செயலை செய்வோம், ஞான விளைவுகளை உருவாக்குவோம். ஞான விளைவு தரும் செயல்களை தற்சோதனை செய்து தேர்வு செய்து கொள்வோம். திட்டமிட்டு தொண்டாற்றி இன்பம் காண்போம்.
🌿 இன்றைய பண்புப் பயிற்சி
🌿 பரவலாக நமக்கு புரிந்த விஷயத்தில் மட்டுமே நம்மால் திறன்பட செயல்களை செய்து வாழ முடியும். நமக்கு புரிய வேண்டிய விஷயங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைய இருக்கிறது. அவைகளை புரிந்துகொள்ளக்கூடிய பண்பில் உயர்வோம். இந்த உயர்வான பண்பில் செயல்களை அமைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வாழ முனைவோம்.
🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌿 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment