நித்தியக்கடன் பிப்ரவரி 13 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 13


💦💫💦💫💦💫💦💫💦💫💦


💯 இன்றைய நித்தியக்கடன்


💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💯 இன்றைய சாதகம்


💯 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

💯 இன்றைய நற்சிந்தனை


💯 நல்ல பழக்கவழக்கங்களையும், பண்புகளையும் எப்படி வாழ்க்கையோடு இணைத்துக்கொள்வது. பொதுவாக நாம் பெரிய திட்டமாக பெரிய விஷயமாக சிந்திக்கிறோம், அது ஒருபுறம் அப்படியே இருக்கட்டும். அன்றாட செயல்களில் சின்னச்சின்னதாக நம்முடைய பழக்க வழக்கங்களையும், பண்புகளையும் உயர்த்திக் கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் தவநிலையில் அமர்ந்து கொண்டு வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று அன்றைய நாளை துவங்கலாம். நாம் எழுந்தவுடன் நாம் உபயோகித்த பெட்ஷீட்டை மடித்து வைக்கலாம். காலைக்கடன்களை முடித்துவிட்டு காயகல்பம், உடற்பயிற்சி, இவைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். உபயோகப்படுத்தும் பொருள்களிலும், உணவுகளிலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாமல் தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்தலாம். நம்முடைய சுற்றுப்புறத்தையும், நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்களையும், சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். சரி இதனால் என்ன பயன்..?


💯 இன்றைய தற்சோதனை


💯 புறத்தூய்மையை நாம் மதிக்கும்போது இது ஒரு சிறந்த பண்பு. அகத்தை நோக்கி பயணிப்பதற்கான, ஒரு அற்புதமான திறவுகோலாக இந்த பழக்கம் நமக்கு அமைகிறது. சிறுக, சிறுக நம்மைச்சுற்றியுள்ள அனைத்து நல்ல நிகழ்வுகளிளும் நம்மை இணைத்துக் கொள்ளும் போது. இது உடல் சார்ந்த செயல்களை தாண்டி, உயிருக்கும், காந்தத்திற்க்கும்  இடையே வலுவூட்டக் கூடியதாக அமைகிறது. இந்த செய்தியை ஆழமாகவும், விரிவாகவும் தற்சோதனை செய்து உங்களுடைய வாழ்க்கையை சுயமாக, நீங்களே வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.


💯 இன்றைய பண்புப்பயிற்சி


💯 உயிரில் இருந்து வாழவேண்டிய வாழ்க்கை அமைப்பு மனிதர்களுடையது. ஆனால் நாம் வெளியே வந்து புலன் மயக்கங்களில் நமக்கே தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் சிறுக சிறுக தான் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். எதன் வழியாக நாம் வெளியே வந்தோம். அதே வழியாக உள்நோக்கி திரும்புவோம். அகத்தாய்வு, தவம், உடற்பயிற்சி, காயகல்பம் இதனை வாழ்க்கையாக வாழும் பண்பில் நாளுக்கு நாள் சிறந்து விளங்குவோமாக. வாழ்க வளமுடன்...

 

💯 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


💯 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments