நித்தியக்கடன் பிப்ரவரி 12 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 12


🏮♻️🏮♻️🏮♻️🏮♻️🏮♻️🏮


🔶 இன்றைய நித்தியக்கடன்


🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔶 இன்றைய சாதகம்


🔶 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

🔶 இன்றைய நற்சிந்தனை


🔶 இந்த பூமியில் வாழும் சுதந்திரம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாள் முதல் கொண்டு இந்த விஞ்ஞானம் கருவிகள் அனைத்தும் உருவாகத் துவங்கியது. இதன் விளைவாக நில பிரிவு, இனப்பிரிவு, மொழி பிரிவு என்று மனிதர்களை பல்வேறு பிரிவுகள் தொற்றிக் கொண்டது. இந்த பிரிவுகளுக்குள் மனிதர்கள் சிக்கிக்கொண்டு எல்லை கட்டிய வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


🔶 இன்றைய தற்சோதனை


🔶 மனித இனம் இந்த பூமியில் ஏன் தோன்றியது? மனிதர்கள் இந்த பூமியில் எவ்வாறு வாழவேண்டும்? மனிதர்களுக்கும் இந்த பூமிக்கும் என்ன தொடர்பு? ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை என்ன? பொறுப்பு என்ன? என்று அனைத்தையும் சிந்திக்க வேண்டும். எதை பெறுவதற்காக இந்த மனிதர்கள் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் என்னதான் தேவை. ஒன்றே ஒன்றுதான் சுதந்திரம் ஜீவ சுதந்திரம்...


🔶 இன்றைய பண்புப்பயிற்சி


🔶 உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் உயிர் சுதந்திரம் பெறுவதற்காகவே முயற்சிக்கிறது. அதுதான் நம்மை பல்வேறு சூழ்நிலைகளுக்கு இழுத்துச் செல்கிறது. அதிலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தை நமக்கு கற்பித்து உண்மையை புரியவைக்க முயற்சி செய்கிறது. இந்த உயிர் சுதந்திரத்திற்கு பொருத்தமான செயல்களை பண்புகளை வாழ்க்கையாக வாழ துவங்கும்போது, மனித வாழ்க்கை விடியலை நோக்கி முளைத்து எழும். அதுவரை போட்டி, பொறாமை, வஞ்சம், பொய், சூது, கொலை என அனைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஊக்குவிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கும். வாழ்க வளமுடன்...

 

🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔶 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments