நித்தியக்கடன் பிப்ரவரி 08 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 08


🌾♦️🌾♦️🌾♦️🌾♦️🌾♦️🌾


💠 இன்றைய நித்தியக்கடன்


💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💠 இன்றைய சாதகம்


💠 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.

 

💠 இன்றைய நற்சிந்தனை


💠 புதிய புதிய அணுக்கள் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்தப் பிரபஞ்ச வெளியில் எப்படி அணுக்கள் உருவாகிறது. என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், அதனுடைய மதிப்பை தெரிந்து கொண்டால், ஆற்றல் மிக்க, வலிமை மிக்க அணுக்கள் ஏன் தேவைப்படுகிறது? என்பது விளங்கிவிடும். இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளது எல்லாம் அணுக்கள் மட்டுமே, அணுக்களின் பல்வேறு தோற்றங்களும், பஞ்சபூதங்களும் பிரபஞ்சம் முழுவதும் உள்ள கோள்களும், நட்சத்திரங்களும் உயிர் வகைகள் அனைத்தும் அனுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சிகள் ஆகும்.


💠 இன்றைய தற்சோதனை


💠 சூரியன் நம் எலும்போடு தொடர்புடையது. புதன் தோளோடு தொடர்புடையது. செவ்வாய் நம் மஜ்ஜையோடு தொடர்புடையது‌. சந்திரன் நம் ரத்தத்தோடு தொடர்புடையது. சுக்கிரன் நமது விந்து நாதத்தோடு தொடர்புடையது‌. குரு நம் மூளையோடு தொடர்புடையது சனி நம் நரம்புகளோடு தொடர்புடையது. ராகு-கேது நம் உடலில் உள்ள ஓஜஸ் எனும் சுத்த சக்தியோடு தொடர்புடையது. பிரபஞ்சவெளியில் ஆற்றலோடும், வலிமையோடும் உள்ள அணுக்கள் நம் உடலோடு இணைந்து இயங்கினால் தான் நம்முடைய உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதனை விரிந்த மனதோடு தற்சோதனை செய்யுங்கள். அந்த புரிதலோடு, விளக்கத்தோடு வாழ்க்கையை நிறைவாக வாழுங்கள்‌.


💠 இன்றைய பண்புப் பயிற்சி


💠 இந்த பிரபஞ்ச தன்மாற்றம் அனைத்தையும் உணர்ந்து கொள்வதற்கு மனதை எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் வைத்திருக்கும் பண்பில் உயர்வோம். இந்த பண்பு நம்முடைய இயல்பாக அமையும்போதுதான் பிரபஞ்ச  தன்மாற்றம் அனைத்தும் நம்முடைய அனுபவமாக சிந்தனையாக நமக்கு கிட்டும். வாழ்க வளமுடன்...

 

💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


💠 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments