நித்தியக்கடன் பிப்ரவரி 07 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 07


💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥


❄️ இன்றைய நித்தியக்கடன்


❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


❄️ இன்றைய சாதகம்


❄️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

 

❄️ இன்றைய நற்சிந்தனை


❄️ ஒரு நாட்டின், சமுதாயத்தின் வளர்ச்சி என்பது சாத்வீக முறையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சியும், அரசியல் அமைப்பும், சமுதாய முன்னேற்றமும் தரமற்ற முறையில் இருக்கக் கூடாது. ஒருவருடைய பலகீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக வளர்ச்சி பெறும் அனைத்துமே தரமற்ற சிந்தனை, செயல், திட்டங்கள். இவ்வாறாக செயல்படுபவர்கள் மனிதர்களே அல்ல. அவர்கள் விலங்கினத்தின் தன்மையில் வாழக்கூடிய வெறும் மனித உருவங்கள் அக்ரினை பொருள்கள்.


❄️ இன்றைய தற்சோதனை


❄️ இனி இந்த உலகிற்கும் மனிதர்களுக்கும் ராஜதந்திரங்கள் எல்லாம் தேவையில்லை. ஒருவர் மீது ஒருவர் ஆட்சி செலுத்துவதும் அதிகாரம் செலுத்துவதும் வன்முறையாகும், அறிவின் குறைபாடாகும். இது ஒருவகையில் ஐந்தறிவு ஜீவன்களுடைய குணம். ஆறாவது அறிவுகொண்ட மனிதர்கள் தன்னுடைய அறிவில் உயர்வு பெறுவதற்கான, வழி முறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தனிமனிதனின் பாதுகாப்பில் துவங்கி உலக அரசியல் உலக பொருளாதாரம் அனைத்தும் மாற்றம் பெறட்டும். வையகத்து மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், பாதுகாப்பும், நேர்மையும் ஒளிரட்டும்.


❄️ இன்றைய பண்புப்பயிற்சி


❄️ "உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம் உயிரறிவை, உள்ளுணர்வாய் பெறுதல் வேண்டும்." இதற்கு ஒவ்வொரு மனிதர்களும் வாழவேண்டிய முறையில் கடமையில் வாழவேண்டும். இயற்கை தத்துவத்தை மதித்து வாழ்வதே தனிமனித கடமையும் ஒழுக்கமுமாகும். இதனை நோக்கி மனிதகுலம் எப்போது திரும்புகிறதோ அந்த நொடி முதல் இவ்வுலக மக்கள் வாழ்க்கை பாதுகாக்கப்படும். அன்பான அருள்காப்பால் அரவணைக்கப்படும். வாழ்க வளமுடன்...

 

❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


❄️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments