நித்தியக்கடன் பிப்ரவரி 06 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 06


🏮🕸️🏮🕸️🏮🕸️🏮🕸️🏮🕸️🏮


♻️ இன்றைய நித்தியக்கடன்


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

♻️ இன்றைய நற்சிந்தனை


♻️ மனிதனுக்குள் தெய்வமும் மிருகமும் பின்னிப் பிணைந்து கலந்து வாழ்கின்றது, இதில் ஒன்றுக்கு ஒன்று நேரெதிர் தன்மைகளை உடையது ஆயினும் ஒன்றின் ஆதிக்கம் மற்றொன்றின் தரத்தை தன்மையை மாற்றியமைக்கும், முழு தெய்வத்தன்மை இயங்கும்போது மிருகம் வீழ்ச்சி அடைகிறது, மிருகத்தன்மை இயங்கும்போது தெய்வம் வீழ்ச்சி அடைகிறது, இந்த இரண்டுக்கும் இடையே நடக்கக்கூடிய போராட்ட நிகழ்ச்சியில் விளைவே மனித வாழ்க்கையில் உடல் நோயாக, வாழ்க்கை சிக்கலாக, மன குழப்பமாக வெளிப்படுகிறது, என்ற உண்மையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


♻️ இன்றைய தற்சோதனை


♻️ தெய்வத் தன்மைக்கும் மிருகத் தன்மைக்கும் இடையே நடைபெறக்கூடிய ஒரு நீண்ட நெடிய நிகழ்ச்சியை, நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தி தெய்வத்தன்மையை மேலோங்கச் செய்து கொள்ள முடியும், இதற்கு தெய்வத்தின் தன்மையில் நின்று நிலைத்து நீடித்து சில உண்மைகளை புரிந்து கொண்டு, அதற்குத் தக்கவாறு நம்முடைய செயல்களில் திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும், இதன் விளைவாகவே தெய்வம் வாழும், மிருகம் வீழ்ச்சி அடையும் சிறுக சிறுக மிருக தன்மையிலிருந்து மாறி, ஒரு சில காலகட்டங்களுக்கு அப்பால் முழுமையாக மிருகத்தன்மை இல்லாத ஒரு முழுநிறைவான வாழ்வை வாழ முடியும்.


♻️ இன்றைய பண்புப்பயிற்சி


♻️ பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் உணர்ச்சிவயப்பட்ட அனைத்து செயல்களும் மிருக தன்மையில் வெளிப்பாடாகும். இந்த குணங்கள் எல்லாம் நமக்குள் இல்லாமல் நம்மை பாதுகாத்து சீரமைத்து சிந்தித்து செயல்படும் பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும், எப்போதும் நம்மை நாம் நிறை மனம், சகிப்புத் தன்மை, ஈகை, கற்பு, சமநேர் நிறை உணர்வு, மன்னிப்பு என்ற தெய்வ குணத்தில் வாழ்வதற்கு முழுயான விருப்பத்தோடு எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் நம்மை தயாராக வைத்துக் கொண்டு முனைப்போடு வாழ வேண்டும் அப்போதுதான் முழுமையாக தெய்வம் வாழும். வாழ்க வளமுடன்...

 

♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments