வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 04
💢♻️💢♻️💢♻️💢♻️💢♻️💢
🌸 இன்றைய நித்தியக்கடன்
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌸 இன்றைய சாதகம்
🌸 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌸 இன்றைய நற்சிந்தனை
🌸 மனித வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்களும், துன்பங்களும், இன்னல்களும், இடர்பாடுகளும் ஒரு சீரான அறிவுஉயர்வின் கீழாக சரியான இடைவெளியில் சீரமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. காலத்துக்கு காலம் இந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும் மனித அறிவிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கின்றது. அறிவின் முழுமையான தன்மையை மனித சமுதாயமும் இன்னும் சில நாட்களில் தன்னுடைய வாழ்வியலாக வாழ போகிறார்கள் என்பது நிச்சயிக்கப்பட்ட உண்மையாகும்.
🌸 இன்றைய தற்சோதனை
🌸 இதுநாள் வரையில் மனித வாழ்க்கையில் இருந்த அனைத்து வகையான சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும், இடர்பாடுகளும், இன்னல்களுக்கும் என்ன காரணம்...? என்பதை நாம் கண்டறிய தொடங்கிவிட்டோம். இது ஒரு இனிமையான தொடக்கம் இந்த துவக்கத்தின் முடிவானது மிகவும் பிரமாண்டமாக அமைதியான ஆளுமை திறனை மேம்படுத்திக் கொண்ட நிறைவோடு அமையப்போகிறது. உயிரை, மனதை ஆளக்கூடிய திறமை மனிதர்களுக்கும் பெருகும் காலம் தொடங்கிவிட்டது.
🌸 இன்றைய பண்புப்பயிற்சி
🌸 தனக்கு தேவையானவற்றை, தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற முறையில் வாழ்க்கையை வாழத் துவங்கிய இந்த மனித சமுதாயம், தேவைகளும், தேவைகளுக்கு துணையான பொருள்களும், அமைப்புகளும் எவ்வாறு உருவானது, என்பதை தெரிந்து கொள்வதற்கான தெய்வீக அறிவு, ஆன்மீக மேம்பாடு, இறைஞானம் உருவாகும் காலம் இது. இந்த காலத்தை இந்த மனித சமுதாயம் மெய்ஞானத்தில் உயர்வு பெறுவதற்காக முழுமையாக பயன்படுத்தும் என்பது இறை சட்டம். ஆன்மிக உயர்வுக்கான இக்காலத்தை வாழ்த்தி வணங்கி வரவேற்போம். வாழ்க வளமுடன்...
🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌸 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment