வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 01
🌌🕸️🌌🕸️🌌🕸️🌌🕸️🌌🕸️🌌
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் இந்த ஏழு அமைப்புகளும் உலகில் எவர் ஒருவருக்கும் ஒத்துப்போகாது இதற்கு பின் வரக்கூடிய பதினாறு வகையான காரணம் அடிப்படையாக அமைகிறது அவை. கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம், கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி, பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி, பழக்கம், வழக்கம், ஒழுக்கம் பல்வேறு வகையான மாற்றங்கள் இருக்கவே செய்யும் இதை வேதாத்திரி மகரிஷி எதற்காக நமக்கு தெளிவுபடுத்துகிறார்கள் என்றால்...
🌀 இன்றைய தற்சோதனை
🌀 உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்கள் இந்த பதினாறு வகையான காரணத்தினால் வேறுபாடோடு தான் இருப்பார்கள். இந்த வேறுபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு எல்லோரோடும், மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் எண்ணப் பகிர்வுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது எல்லாவிதமான வேறு பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டு தெளிவாக வாழ்வதே ஆகும். எந்த அளவிற்கு நம்மை நாம் தற்சோதனையில் ஈடுபடுத்திக் கொள்கிரோமோ அந்த அளவு இறை நிலைக்கும் நமக்குமான இடைவெளி குறையும். மகரிஷி கொடுத்த பயிற்சியில் முழுமையாக நம்மை நாம் ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பாக வாழ்வதற்கு தற்சோதனை பேருதவியாக அமைகிறது.
🌀 இன்றைய பண்புப்பயிற்சி
🌀 ஏற்றத்தாழ்வுகளோடு தான் மனித வாழ்க்கை இருக்கும். சில வகையான ஏற்றத்தாழ்வுகளை நாம் சமன் செய்து கொள்ள முடியும். சில வகையான ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காக முயற்சி செய்ய வேண்டும். இந்த சிந்தனையோடு நிறைவாக வாழக்கூடிய பண்பை நமதாக்கிக் கொண்டால் வாழ்க்கை இப்போதும், எப்போதும் மகிழ்ச்சியான தாகவே இருக்கும். வாழ்க வளமுடன்...
🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment