நித்தியக்கடன் டிசம்பர் 31 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 31


🌸🍒🌸🍒🌸🍒🌸🍒🌸🍒🌸


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌀 இன்றைய சாதகம்


🌀 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.

 

🌀 இன்றைய நற்சிந்தனை


🌀 இந்த பிரபஞ்சத்திற்கு உள்ளும் புறமும், மனிதர்களுக்கு உள்ளும் புறமும், இருந்து கொண்டு அறிவு பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. அறிவு இல்லாத இடமோ, பொருளோ இப்பிரபஞ்சத்தில் இல்லை.ஏனினில் இடமாகவும், பொருளாகவும் இருப்பது அறிவே ஆகும். இந்த பிரபஞ்சமாகவும், பூரண நிலையாகவும், முழுமையான பொருளாகவும் இருப்பது சுத்தவெளி, தெய்வம். சுத்தவெளி முழுக்க முழுக்க அறிவுப்பூர்வமானது. சுத்தவெளிக்குள் உள்ளடங்கி இருந்த அறிவு பிரபஞ்சமாக மலர்ந்தபோது அனுபவ அறிவாக மலர்ச்சி பெற்றிருக்கிறது.


🌀 இன்றைய தற்சோதனை


🌀 தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற தன்னார்வத்தின் அடிப்படையிலேயே, இந்த கோள்களும், அண்டங்களும், பலவகையான உயிர் வகைகளும் இந்த பிரபஞ்சத்தில் உருவானது. அதில் மனிதனுக்குள் இந்த தன்மாற்ற செயல்முறை அமைப்பு முழுமையாக நிறைவு பெற்றுவிட்டது. மனிதனின் உடலமைப்பு இறைநிலையை உணர்வதற்கான அத்துணை வாய்ப்புகளையும் அகன்று விரிந்து நிறைவாக பெற்றுள்ளது. இது மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய நல்வினைப் பதிவு, கூடவே தீவினைப் பதிவும் உள்ளது அது என்னவெனில்...


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 வித்துத் தொடராக இந்த மனித உருவத்தை நாம் பெற்று வந்த காரணத்தினால் நமக்குள் விலங்கின பதிவு இருக்கிறது. இது நமக்குள் இருக்கும் இந்த தீவினைப் பதிவுகளை நல்வினைப் பதிவுகளாக உயர்த்தி கொள்வதற்கு தவப் பயிற்சியும், தன்னிலை விளக்கம் பெறுதலும், தன்னார்வமும், சுய கட்டுப்பாடும் இதற்கு தேவை. இந்த பண்புகளின் அடிப்படையிலேயே நாம் இந்த தன்மாற்ற சரித்திர உண்மைகளை அனுபவம் ஆக்கிக் கொள்ள முடியும். இந்த அனுபவ அறிவில் உயர உயரத் தான் மனித வாழ்க்கை முழுமை பெறுகிறது. வாழ்க வளமுடன்...

 

🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments